#விளக்கிடு கல்யாணம் (விளக்கேற்றுத் திருமணம் )

April 13, 2022 0 Comments

தமிழ்நாட்டில் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட கார்காத்த வேளாளர் என்கிற சமூகத்தில் #விளக்கிடு கல்யாணம் (விளக்கேற்றுத் திருமணம் )என்று ஒரு வைபவம் உண்டு.
திருமண விழாவைப் போல் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெறும்.
பெண் குழந்தையின் தாய்மாமன்/தாத்தா அப்பெண்ணின் கழுத்தில் வெள்ளிக் கம்பியில் தங்கமணிகள் பவளங்கள் 9 கோர்த்துள்ள குதச்சிமணி என்று அழைக்கப்படும் அணிகலனை அணிவிக்கும் சடங்குதான் விளக்கேற்றுத் திருமணம் எனப்படும்.
பெண் ருது ஆவதற்கு முன் அந்த பெண்ணின் 7 அல்லது 9 அல்லது 11 வயதில் பொங்கல் அன்று திருமணம் போல வெகுவிமர்சையாக இந்த விழா நடைபெறும்.
அப்போது அந்த பெண்ணிற்கு அணிவிக்கப்படும் பவளங்களை பின் அந்த பெண் தனக்கு திருமணம் ஆகும்போது அணிவிக்கப்படும் தன்னுடைய தாலியில் இணைத்து போட்டுக் கொள்வார்.
நான் ஒரு ஆராய்ச்சிக்காக இந்த
விளக்கேற்றுத் திருமணம் எதற்காக என்று ஒரு கேள்வியை முன் வைத்த போது யாராலும் இதற்கு சரியான விடையைக் கூற முடியவில்லை.
விளக்கேற்றுத் திருமணம் அன்று அந்த பெண்ணிற்கு அணிவிக்கப்படும் பவள மாலையை இத்துடன் கொடுத்துள்ளேன்.
யாருக்காவது இது குறித்து விபரம் தெரிந்தால் உங்கள் பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன்..
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =