வாழ்க நம்மாழ்வார் வாழ்த்துங்கள்
வாழ்க நம்மாழ்வார்
வாழ்த்துங்கள்
வாழ்த்தப்படுவோம்
சபியுங்கள்
சபிக்கப்படுவோம்
நாம் ஒருவரை
ஆசிர்வதிக்கும் போது நாமும் ஆசிர்வதிக்கப்படுகிறோம்
நாம் ஆசீர்வதிக்கப்பட
வேண்டும் என்றால் பாராட்ட பழகுவோம் மனம் திறந்து….
அதிலும் குறிப்பாக
உயர பறக்க
இறக்கைகள்
தேவையில்லை
ஒரே ஒரு
லட்சியம்
இருந்தால் போதும்
என்று தன் லட்சியத்திற்காகவே
வாழும் மக்களை பார்ப்பதே
அரிதாகி போய்விட்ட இந்த காலத்தில்
இன்று (20/05/2023) அவினாசி அருகே மதிய உணவிற்காக அன்பு சகோதரரின் அன்பினால் மதியம் சாப்பிட சென்ற இடம் என்னை இனம் புரியாத மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது
நிச்சயம் லட்சியம் என்பதை
தனக்கே தனக்கென்று உருவாக்கி
யாரையும் தன்னோடு ஒப்பிடாமல் மெருகேற்றிக் கொண்ட ஒருவரால் தான் இப்படிப்பட்ட உணவகத்தை நடத்த முடியும்
மதிய உணவுக்காக உணவகம் சென்றாலே மீல்ஸ் பிரியாணி பிரைடு ரைஸ் வைரட்டி ரைஸ் என்று கேட்டே பழகிய காதில் முதல் முறையாக
உளுந்தங்களி என்கின்ற ஒரு விஷயத்தைத் தவிர அவர்கள் சொன்ன எதுவுமே என் வயதிற்கு காதில் விழுந்ததே இல்லை
அந்த அளவிற்கு எல்லாமே நம்மாழ்வார் வழியில்…
என் ஊரில் வயதுக்கு வந்த பெண்களுக்கு உளுந்தங்களி கொடுப்பார்கள்
அது இனிப்பாக இருக்கும்.
முதல்முறையாக உளுந்தங்களிக்கு சட்னி வைத்து மதிய உணவாக இன்று சாப்பிட்ட பொழுது தமிழ்நாட்டில் தான் இருக்கின்றோமா என்று ஒரு ஐயமே ஏற்பட்டு விட்டது.
அதைவிட படித்தவர்கள் படிக்காதவர்கள் என எல்லோரும் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக
தங்களுக்கு வேண்டியவற்றை கேட்டு ரசித்து சாப்பிட்டதை பார்த்த போது
வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு
நல்ல மாற்றம் மக்கள் மனதில்…
இந்த மாற்றம் நிச்சயமாக மக்களுடைய உடல்நிலையில் பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும்
என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
இனிப்பு மற்றும் உடம்பை கெடுக்கும் விஷயங்கள் இல்லாத ஒரு உணவகத்தை அதுவும் வெற்றிகரமாக நடத்துவது எளிதான ஒரு விஷயம் அல்ல.
தொடரட்டும் இது போல உணவகங்களின் வெற்றிகள்
நம்மாழ்வார் நம்மிடம் இல்லாவிட்டாலும்
நம் நினைவெல்லாம் இன்றைக்கும் வாழும் வகையில் அவர் வழி செய்து கொடுத்து போய்விட்டார் என்கின்ற மிகப்பெரிய மகிழ்ச்சியில் உறங்க செல்கின்றேன்
வாழ்த்துங்கள்
வாழ்த்தப்படுவோம்
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்