வள்ளியூர் பக்கம் வந்தா நீங்களும் நான் சொன்னது உண்மையா என்று பரிசோதித்து பாருங்களேன்.
இன்று (14/04/2022)
மதியம் நாங்கள்
நல்ல பசியுடன் இருந்ததால்
நல்ல சுவையான சைவ உணவு வேண்டும் என்று நான்
கேட்டுக் கொண்டதற்கிணங்க
என்னுடைய வாகன ஓட்டுநர்
திரு பரமசிவம் அவர்கள் சொன்னதன் பேரில்
வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சரஸ்வதி பவான் ஹோட்டலில் உணவருந்த சென்றோம்.
நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு
நீண்ட நாளைக்குப் பிறகு
அதுவும் தேடலுக்கு பிறகு
உண்மையான திருநெல்வேலி சாப்பாட்டை சாப்பிட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவு.
மதிய சைவ சாப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது என்னிடம் கேட்டால்
தயங்காமல் சொல்வேன் இனி.
வள்ளியூர் சென்று
சரஸ்வதி பவானில் சாப்பிட்டு பாருங்களேன் என்று.
அந்த அளவிற்கு நல்ல
சைவ உணவை இந்தச் சொக்கலிங்கத்திற்கு இன்று கொடுக்க காரணமாக இருந்த பரமசிவத்திற்கு என் மனமார்ந்த நன்றி.
நல்ல உணவை
சாப்பிட்ட பிறகு வயிற்றில்
கொஞ்சம் இடம் மீதமிருந்ததால்
சரஸ்வதி பவான்
உணவகத்திற்கு
எதிரே இருந்த
ராமன் பழக்கடையின்
வெளியே நுங்கு
கொட்டி கிடந்ததைப் பார்த்து தானாகவே என் கால்கள் ராமன்
பழக்கடையை நோக்கி
நகர்ந்து பின் ராமன் பழக்கடையின் விசேஷம் என்று
கடைக்காரரால் பரிந்துரைக்கப்பட்ட
நுங்கு இளநீர் பழச்சாறு
ஒன்று வாங்கி அருந்தி பார்த்தேன்.
நுங்கு இளநீர்
பழச்சாறு சுவை அடி தூள்.
Simply Super.
அந்த நொடியில்
கடவுள் இது போன்ற
விஷயங்களை அனுபவிப்பதற்காகவே
இன்னும் சிறிது காலம் நம்மை
விட்டு வைக்க வேண்டுமென்று
மனதார நினைத்துக் கொண்டேன்.
திருநெல்வேலி
திருநெல்வேலி தான்.
திருநெல்வேலிகாரன் என்பதில் பெருமை படுகின்றேன்.
வள்ளியூர் பக்கம் வந்தா நீங்களும் நான் சொன்னது உண்மையா என்று பரிசோதித்து பாருங்களேன்.
என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்