கோவில்மணி…

October 2, 2021 0 Comments

கோவில்மணி

அயோத்தியாவில்
பேச்சுக்கள் முடிந்தபிறகு

ராமர் கோவிலுக்காக சேகரிக்கப்பட்ட பொருட்களையும், கோவிலுக்காக செய்யப்பட்ட பொருள்களையும் பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதில் நான் பார்த்த வருத்தத்துக்குரிய விஷயத்தை
பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் வேலை இருக்கின்றது இந்த ஒரு பொருளை தவிர என்று ஒரு கோவில் மணியை காண்பித்தார்கள்.

ஏனென்று கேட்டதற்கு
எனக்கு சொல்லப்பட்ட பதில்

அந்த கோவில் மணியில்
அதைக் கொடுத்தவர்களுடைய பெயர் உள்ளது. அதனால் அதை கோவிலில் உபயோகப்படுத்த முடியாது என்று.

அந்த கோவில் மணி பற்றி என்னை அழைத்து போனவர்கள் விவரம் சொன்ன பிறகு எனக்கே வருத்தமாக தான் இருந்தது அந்த மணியை பார்க்க.

ஏன் பிறந்தாய் மகனே
என்கின்ற பாவனையோடு
எதற்கும்
பிரயோஜனம் இல்லாமல்
யாருக்கும் பயனில்லாமல் உபயோகம் இல்லாமல்
எதற்காக செய்யப்பட்டோம்
என்கிற விவரம் புரியாமல் இடத்தை அடைத்து கொண்டு
தேமே என்று தரையில் கிடக்கும் அந்த கோவில் மணியை
பார்த்தபோது உண்மையிலே
பச்சாதாபம் தான் மேலிட்டது.

சற்று பரிதாபத்துடன் அந்த கோவில் மணியை உற்று நோக்கிய பொழுது இன்னும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்

காரணம் அந்த மணியை செய்து அனுப்பியவர்கள் தமிழர்கள் & அந்த மணி செய்யப்பட்ட இடம் தமிழ்நாடு.

நூற்றுக்கணக்கான கோவிலை கட்டிய எந்த தமிழ் அரசனும் அவர்கள் பெயரை அந்த கோவிலில் செதுக்கவில்லை.

நூற்றுக்கணக்கான கோவிலுக்கு தமிழ்நாட்டில் கைங்கரியங்கள் செய்யும் எவரும் அவர்கள் பெயரை வெளியில் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் சாதாரண கோவில் மணிக்கு …

பதிலை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

உங்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம்:

நம் மண்ணிலிருந்து இனி நாம் செய்யும் எந்த கைங்கரியத்திலும் நம் பெயர் வராமல் பார்த்துக் கொள்வோம்
இன்னொரு முறை
இன்னொரு பொருள்
இந்த பூமியில் உபயோகமில்லாமல் போகக் கூடாது என்பதற்காகவது.

நன்றி
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =