ஒரு கருத்து தெரிவித்து முகநூலில் ஒரு பதிவு செய்திருந்தேன்…

October 27, 2022 0 Comments

அன்பு நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்
இன்று
நான் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து ஒரு கருத்து தெரிவித்து முகநூலில் ஒரு பதிவு செய்திருந்தேன்.
இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து.
இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சொன்ன கருத்தால் இந்து மதத்திற்கு எதிரான தீவிரவாதி போல் என்னை சித்தரித்து சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
அப்படிப்பட்ட அன்பு உள்ளங்களுக்கு ஒரே ஒரு கேள்வி:
நாம் சார்ந்த இந்துமதம் குறித்து
தந்தை பெரியார் சொன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர்
திரு ஆ.ராஜா அவர்கள் பேசிய இந்த வீடியோவிற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்து இருந்தால் என்னை கேள்வி கேட்க அத்தனை உரிமையும் உங்களுக்கு உண்டு.
அப்படி இல்லாமல் விதண்டாவாத பேச்சுக்களை மட்டும் முன்வைத்த நண்பர்களுக்கு ஒரு கேள்வி
நான் இதுவரை இந்து மதத்திற்கு செய்த/ஆற்றிய பணியை விட நீங்கள் 1 இன்ச் அதிகம் செய்திருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
ஒருகால் நீங்கள் அப்படி செய்திருந்தால் உட்கார்ந்து பேசலாம் யார் மீது தவறு என்று.
முகநூலில் கம்பு சுற்றுவதை விட்டுவிட்டு இந்து மதத்தை அடுத்த கட்டம் நகர்த்துவதற்கு என்ன வழி என்று உட்கார்ந்து யோசிக்கவும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு
ஏன் அனைத்திற்கும் அப்பாற்பட்டு
தமிழ்நாட்டில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஹிந்துக்களுக்கு ஹிந்து உணர்வை ஊட்டக்கூடிய வேலையை செவ்வனே செய்து முடிப்பேன்.
அப்போது தெரியும்
யார் ஹிந்து மதத்தின் எதிரி
யார் இந்து மதத்தின்
காவலர்கள் என்று…
நம் மதம் பிறரால் காயப்படுத்த கூடாது என்றால் நாம் நம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை மட்டும் நிறைவாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
என் மக்களை அதற்கு நிச்சயம் நான் தயார் செய்வேன்
காத்திருங்கள்
எதிர்பாத்திருங்கள்
ஆண்டாள் தாயாருடைய பெயருக்கு ஒருவரால் இழுக்கு ஏற்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தூக்கம் தொலைத்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்
எப்படி என் மக்களை கட்டமைத்து செல்வது என்று
கட்டாயம் கட்டமைப்பேன்
அதுவரை இந்து என்ற போர்வையில் வாயில் கம்பு சுற்றும் வெட்டிப் பயல்களுக்கு ஒரு விண்ணப்பம்
பக்கம் பக்கமாக வசனம் எழுதுவதையும் கருத்து சொல்வதையும் விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள் எட்ட நின்று…..
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =