#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் புதுச்சேரி

August 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் புதுச்சேரி
215.#அருள்மிகு_மணக்குள_விநாயகர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : மணக்குள விநாயகர்
தீர்த்தம் : மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.
புராண பெயர் : மணக்குளத்து விநாயகர்
ஊர் : புதுச்சேரி
மாநிலம் : புதுச்சேரி
ஸ்தல வரலாறு:
பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான கோயில். புதுச்சேரி மக்கள் இந்த விநாயகரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர். இந்தக் கோயிலை இடிப்பதற்கு பல முறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை காப்பாற்றி வந்துள்ளனர். வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும் இந்தக் கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்று அழைக்கப்பட்டு தற்போது மணக்குள விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது. இது இந்தக் கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
கோயில் சிறப்புகள்:
•விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது
•அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே.
•உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.
•விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.
•சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.
•புதுவையை ஆட்சி செய்த பரங்கியர்கள் காலத்தில் மணற்குள விநாயகர் விக்ரகம் பலமுறை கடலில் போடப்பட்டதாகவும், பின்னர் ஒவ்வொரு முறையும் அந்தத் திருவுருவம் பழைய இடத்திலேயே இருந்ததாகவும் இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததாகவும் மக்கள் இன்று வரை கூறிவரும் செவிவழிச் செய்தியாகும்.
•தொள்ளைக்காது சுவாமிகள் என்று போற்றப்படுகின்ற முரட்டாண்டிச்சித்தர் புதுவையை நாடி வந்தார். இவரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது, ஆனால் சற்றே முரட்டுக் குணம் உடையவராக விளங்கியவர். நெடிய உயரம், ஒல்லியான உடல்வாகுடன் எதன்மீதும் பற்றற்ற நிலையில், எதனையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாத நிலையில் வாழ்ந்தவர். இன்றைய புதுச்சேரி எல்லைக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் காணப்பட்ட மேடான ஓரிடத்தில் தனித்து வாழத் தலைப்பட்டார். இத் தொள்ளைக்காது சுவாமிகள் வெள்ளைக்காரர்கள் அக்காலத்தில் புதுவையில் வசித்துக் கொண்டிருந்த பகுதியில் சமாதி ஆகிவிட்டமையால் புதுவை வாழ் பொதுமக்கள் வெள்ளைக்காரர் வீதியில் தொள்ளைக்காதர் அமைந்துவிட்டார் என்று கூறி வந்தனர் என்பர்.
•மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின், இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.
•புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.
•இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.
•மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
•கோவில் வளாகத்திற்குள், ஐந்து முகங்களைக் கொண்ட விநாயகரின் வடிவமான பஞ்சமுக விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு முகமும் தெய்வத்தின் தெய்வீக குணங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கிறது. ஞானம், அறிவு மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக பஞ்சமுக விநாயகரின் ஆசீர்வாதத்தை கோரி பக்தர்கள் இந்த சன்னதியில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழா:
விநாயகர் சதுர்த்தி – இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
பிரம்மோற்ஸவம் – ஆவணி – 25 நாட்கள் திருவிழா
பவித்திர உற்சவம் – 10 நாட்கள் திருவிழா
திறக்கும் நேரம்:
காலை மணி 6 முதல் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவ 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் ,
புதுச்சேரி -605001
போன்:
+91-413-2336544
அமைவிடம்:
புதுச்சேரி நகரின் மத்தியில் கோயில் உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #மணக்குளவிநாயகர் #manakkulavinayagar #pondicherry #புதுச்சேரி #vinayagartemple #pillayartemple

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 20 =