#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒட்டன்சத்திரம்

August 26, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒட்டன்சத்திரம்
211.#அருள்மிகு_குழந்தை_வேலப்பர்_கோயில்_வரலாறு
மூலவர் : குழந்தை வேலப்பர்
ஊர் : ஒட்டன்சத்திரம்
மாவட்டம் : திண்டுக்கல்
ஸ்தல வரலாறு:
திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளக்குகின்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானைப் போல அரசபிள்ளைப்பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றார். மற்ற கோயில்களைப் போன்று இல்லாமல் மிட்டாய்களைக் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
கோயில் சிறப்புகள்:
•கருவறையில் குழந்தை வடிவில் கையில் வேலுடன் திகழ்வதால், குழந்தைவேலப்பர் எனும் திருநாமம் முருகப் பெருமானுக்கு
•பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள், குழந்தைவேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழநிக்குச் செல்கின்றனர்.
•அருணகிரிநாதர் வணங்கிய தலம் என்ற பெருமை கொண்டது
•இக்கோயில்.மூலிகை மலைகோயிலுக்கு பின்புறம் பழநி மலையைப் போன்றே மூலிகை மரங்கள் நிறைந்த மலை ஒன்று இருக்கிறது. இங்கும் ஒரு கோயில் உள்ளது. மலைமீது தான் பழநி முருகனைப் போல குழந்தை வேலப்பர் இருந்ததாக கூறுகின்றனர். பழங்கால சிலை ஒன்று மலைக் கோயிலில் இருந்துள்ளது. சிதிலமடைந்த அச்சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
•பழநி மலைக்கு இணையாக, அதேபோன்ற அமைப்புடன் உள்ளது இதன் தனிச் சிறப்பு.
•இம்மலையை மேற்கிலிருந்து பார்த்தால் பழநி மலைப் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை போன்றும் தெரியும்.மலையைச் சுற்றிலும் ஏராளமான மூலிகை மரங்கள், செடிகள் நிறைந்துள்ளன.
•இக்கோயிலில் நுழைவாயில் சித்தி விநாயகர் சர்பத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார். உட்பிரகாரத்தில் காலபைரவரும், தக்ஷிணாமூர்த்தியும், சண்டிகேசுவரரும் அருள்பாலிக்கின்றனர்.
•தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனிக்குச் செல்லும் பக்தர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்பே பழனி முருகனைச் சந்திக்கப் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்,
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம்.
அமைவிடம்:
திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் வழியில் சுமார் 38 கி.மீ. தொலைவில் உள்ளது ஒட்டன்சத்திரம். இங்கிருந்து பழநி செல்லும் வழியில், சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், குழந்தைவேலப்பர் கோயிலை அடையலாம்.

#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #குழந்தைவேலப்பர் #kulanthaivelappar #Ottachathiram #murugantemple #மிட்டாய்முருகன் #ஒட்டன்சத்திரம் #திண்டுக்கல் #mittaimurugan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =