#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாளப்புத்தூர்

July 22, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாளப்புத்தூர்
178.#அருள்மிகு_மாணிக்கவண்ணர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி
தல விருட்சம் : வாகை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
புராண பெயர் : திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
ஊர் : திருவாளப்புத்தூர்
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு:
ருதுகேதன் எனும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே சிவன் மாணிக்க மழையை பொழிவித்தார். எனவே இவருக்கு மாணிக்கவண்ணர் என்று பெயர் வந்தது. திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலம். மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதாலும் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் என்றும் புராண வரலாறு உள்ளது. வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. தேவர்கள் பாற்கடலை கடைந்த போது மத்தாக பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டி பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த துர்க்கை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த பிறகு இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாள். இவள் எட்டு கைகளுடன் சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும் ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுகிறாள்.
பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன் தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது முதியவரை காணவில்லை. அவன் தேடியபோது பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான் அர்ஜூனன். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம் வாளொளிப்புற்றூர் என்று பெயர் பெற்றது.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 29 வது தேவாரத்தலம் திருவாழ்கொளிப்புத்தூர். புராணபெயர் திருவாள்ஒளிப்புற்றூர்.
•மூலவர் மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர், இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
•அம்பாள் வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள். அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயர் பெற்றாள்.
•கோவில்வகிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் முன் ஆலயத்தின் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார்.
•தலவிநாயகராக நிருதி விநாயகர் உள்ளார்.
•தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும். பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது.
•பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால் விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
•கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.
•மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த துர்க்கை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த பிறகு இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாள். இவள் எட்டு கைகளுடன் சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும் ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுகிறாள்.
•துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.
•வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.
•பிரம்மன், இந்திரன், துர்வாசர், அஞ்சகேது, விப்ரவணிகன் திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி வழிபட்டுள்ளனர்.
•சுந்தரர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.
•இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை மறக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதலால், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.
•வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “தாவு மயல் தாழ்கொள் இருமனத்துக் கார் இருள் நீத்தோரு மருவும் வாழ்கொளிபுத்தூர் மணிச் சுடரே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில்,
திருவாளப்புத்தூர் – 609 205.
மயிலாடுதுறை மாவட்டம்.
போன்:
+91-4364 – 254 879, 98425 38954.
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாப்பில் இறங்கி சுமார் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #மாணிக்கவண்ணர் #ரத்னபுரீஸ்வரர் #Tiruvalaputhur #ManickavannarTemple
#Rathnapureeswarar #Thiruvazhlkoliputhur #திருவாளப்புத்தூர் #பிரமகுந்தளாம்பிகை #வண்டமர்பூங்குழலி #DrAndalPChockalingam #SABP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =