வீட்டிலோ / வியாபார ஸ்தலத்திலோ கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் கீழ்கண்டவாறு:
- வடக்கு / கிழக்கு பகுதியில் பொது சுவர் கூடாது.
- வடக்கு / கிழக்கு எல்லை வரை மூடப்பட்டு கட்டிடம் கட்டக்கூடாது.
- வடக்கு / கிழக்கு பகுதியில் மதில் சுவர் அவசியம்.
- வீட்டின் மதில் சுவருக்கும், வீட்டின் தாய் சுவருக்கும் உள்ள இடைவெளியானது கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அதிகமாகவும், மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் குறைவாகவும் இருக்க வேண்டும்.
- மேற்கு மதில் சுவர் கிழக்கு மதில் சுவரை விட உயரம் அதிகமாகவும், தெற்கு மதில் சுவர் வடக்கு மதில் சுவரை விட உயரம் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
- தென்மேற்கு மூலையை ஒட்டியவாறு கட்டிடம் கட்டுதல் அவசியம்.
- இருக்கின்ற இடத்தின் அருகே இடம் வாங்கும் போது கூடுமானவரை கிழக்கு / வடக்கு நோக்கி உள்ள இடங்களை வாங்குதல் வேண்டும். தெற்கு / மேற்கு நோக்கி உள்ள இடம் வாங்குதல் தவிர்க்கப்பட வேண்டும்(வீட்டின் எதிரே உள்ள தெருத்தாக்கத்தை பொறுத்து இவ்விதி மாற வாய்ப்புண்டு). தவறான தெருக்குத்து / தெருப்பர்வை உள்ள இடம் மற்றும் வீடுகளை தவிர்ப்பது நல்லது.
- வடகிழக்கு பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.
- கட்டிட அமைப்பில் (தாய் சுவர்) முனைகள் உடையக்கூடாது. அதாவது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருத்தல் அவசியம்.
- கட்டிட அமைப்பில் எந்த முனைகளும் நீண்டு இருத்தல் கூடாது.
- வீட்டின் திசை எந்தப்பக்கம் இருந்தாலும் தலை வாசல் (1), (2), (3), (4) எனக்குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் இருக்க வேண்டும். வீட்டின் உட்புற அறையின் வாசல்களுக்கும் இந்த விதி பொருந்தும். வீட்டின் வெளி வாசல்கள் (1), (2), (4), (6), (8) என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும்.
- வீட்டின் உட்புறம் போடப்படும் பரண்கள் மேற்கு / தெற்கு சுவர்களில் மட்டும் தான் போடப்பட வேண்டும்.
- கிழக்கு, வடக்கு பகுதியின் உட்புற சுவர்களை சார்ந்து படிக்கட்டு அமைப்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
- கழிவறைகள் வீட்டின் வடமேற்கு பகுதியில் அமைப்பது நல்லது.
- வீட்டின் வெளிப்புறம் வரும் படிக்கட்டுகளை மூடக்கூடாது. வெளிப்புற படிக்கட்டுகள் திறந்தவெளி படிக்கட்டாக இருக்க வேண்டும். அது வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு வெளி மூலைகளில் தூண் இல்லாமல்(Cantilever Type) அமைக்கப்பட வேண்டும். வடகிழக்கு மூலையில் உள்ளே மட்டும் அல்லாமல் வெளியிலும் படிக்கட்டு வரவேக்கூடாது. வெளிப்படிக்கட்டுகளுக்கு கீழ் அறை மற்றும் கழிவறை அமைப்பது கூடாது.
- அடுக்கு மாடி வீடுகளில் வடகிழக்கு மூலையில் உள்ள வீடுகளுக்கு மட்டும் தான் ஓரளவு வாஸ்து பொருந்தும்.
- வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் இருக்க வேண்டும்.
- வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும்.
- தாய்சுவரின் எந்த முனையும் உடையாமல் இருக்க வேண்டும்.
- கழிவறை வடகிழக்கிலும் தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.
- சமையலறை / பூஜையறை வடகிழக்கிலும் தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.
- மதில் சுவரையும் சேர்த்து அறைகள் அமைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
- வாடகை வீடுகளுக்கும் வாஸ்து பார்த்து குடியேறுவது தான் நல்லது.
- அறையின் நீள, அகல அளவுகள் மனையடி சாஸ்திரப்படி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனால் எந்தவித நன்மையும் / தீமையும் இல்லை.
- வீட்டிற்குள் கழிவுநீர்த்தொட்டி (Septic Tank) / Bore / Sump / கிணறு வரவேக்கூடாது.
ஒரு வீட்டின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மூலையான வடகிழக்கில் வரக்கூடாதவை: (உள் மற்றும் வெளி மூலைகள்)
- படுக்கையறை
- பூஜையறை
- குளியலறை / கழிப்பறை
- சமையல் அறை
- மரம் / செடி கொடிகள் Inverter / Generator / EB Box / Portico மேல்நிலை தண்ணீர் தொட்டி வரவேக்கூடாது
- உட்புற & வெளிப்புற மூலை படிக்கட்டு
- சுற்றுச் சுவர் எழுப்பப்பட்ட கிணறு
- பொருட்கள் வைக்கும் அறை
- கழிவு நீர் தொட்டி
தென்மேற்கு உள் மூலையில் வரக் கூடாதது:-
- உட்புற படிக்கட்டு
- சமையலறை
- திறப்புகள் (ஜன்னல்கள் மற்றும் கதவுகள்) / Inverter / Generator / EB Box
- பூஜையறை
- குளியலறை / கழிப்பறை
தென்மேற்கு வெளி மூலையில் வரக்கூடாதவை:-
- கழிவு நீர் தொட்டி
- மூடப்பட்டு படிக்கட்டு
- தெருக்குத்து
- கிணறு / Bore
- பள்ளம்
- குளியலறை / கழிவறை / Inverter / Generator / EB Box / Portico
- தென்மேற்கு அறையை கீழ்கண்ட பயனுக்காக பயன்படுத்துதல் நல்லது:-
- குடும்ப தலைவர், தலைவியுடன் படுக்கும் அறை
- பணப் பெட்டி வைக்கும் அறை (கிழக்கு (அ) வடக்கு நோக்கி)
- பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் வைக்கும் அறை
- தென்மேற்கு அறையின் மேலே கணம் இருப்பது நல்லது
- வீட்டின் மேல் பகுதியில் தண்ணீர் தொட்டி (Over Head Tank) வைக்க வேண்டும்
தென்கிழக்கு மூலையில் வரக்கூடாதவை:- (உள் மற்றும் வெளி மூலைகள்)
- குடும்ப தலைவர் / தலைவி படுக்கையறை
- கழிவுநீர் தொட்டி / கிணறு
- பள்ளம் / Bore / Portico
- குளியலறை / கழிவறை
- உட்புற மூலை படிக்கட்டு / வெளிப்புற மூடப்பட்ட படிக்கட்டு
- மேல்நிலை தண்ணீர் தொட்டி வரவேக்கூடாது
தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை:-
- கிழக்கு பார்த்தவாறு சமையல்
- Home Theatre
- பூஜையறை
- Dark Room
வடமேற்கு மூலையில் வரக்கூடாதவை:- (உள் மற்றும் வெளி மூலைகள்)
- பணப்பெட்டி வைக்கும் அறை
- படிக்கும் அறை
- கிணறு / பள்ளம் / Bore / Portico
- உட்புற மூலை படிக்கட்டு
- வெளிப்புற மூடப்பட்ட படிக்கட்டு
- மேல்நிலை தண்ணீர் தொட்டி வரவேக்கூடாது
வடமேற்கு மூலையில் வரக்கூடியவை:-
- கழிவறை (உட்காரும் முறை: வடக்கு (அ) தெற்கு நோக்கி அமருவது நல்லது)
- தொழிற்சாலை என்றால் விற்க வேண்டிய பொருட்களை வைக்க வேண்டும்.
இந்த மேற்கூறிய விதிகளுக்கு உட்பட்டு வீடுகள் / தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், அது ஒரு சிறப்பான நிலையை அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும், தொழிற்சாலையை நிர்வகிப்பவர்களுக்கும் கொடுக்கும். எல்லாவற்றிற்க்கும் மேலாக நேர்மையான முறையில் பொருளீட்ட வேண்டும். பெற்ற / வளர்த்த தாய், தந்தையரை எல்லா காலத்திலும் நல்லபடியாக காப்பாற்ற வேண்டும். எண்ணம், சொல், செயல் எப்போதும் நேர்மையாக இருக்க வடகிழக்கு மூலையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கண்டிப்பாக ஜன்னல்கள் இருக்க வேண்டும் (24 X 7 – ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும்). இயற்கைக்கு முரணான முறையில் வட்டித் தொழிலில் ஈடுபட்டு பொருள் சம்பாதிப்பது தவறாகையால் அதனை தவிர்த்தல் நல்லது. உண்மையான ஏழைகளுக்கு பசி ஆற்றுதல், வஸ்த்திர தானம், கல்வி தானம் அளிப்பது சாலச்சிறந்தது. தமிழ் நாட்டில் கட்டாயம் தரிசிக்கப்பட வேண்டிய ஆன்மீக திருத்தலங்கள்:-
- ஸ்ரீ சதுரகிரி மாகலிங்க சுவாமி
- திருநெல்வேலி நெல்லையப்பர்
- பாபநாசம் பாபநாத சுவாமி
- உவரி சுயம்புலிங்க சுவாமி
- இராமேஸ்வரம் இராமநாத சுவாமி
- திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
- திருவெண்காடு சுவேதாரண்யயேஸ்வரர்
- பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர்
- திருக்கருகாவூர் முல்லைவனநாதர்
- மதுரை சொக்கநாதர்
- திருமாகறல் திருமாகறலீஸ்வரர்
- திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்
- திருவொற்றியூர் தியாகராஜா சுவாமி
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
- புன்னைநல்லூர் மாரியம்மன்
- சிதம்பரம் தில்லையம்மன்
- சமயபுரம் மாரியம்மன்
- சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன்
- பண்ணாரி ஸ்ரீபண்ணாரி அம்மன்
- மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன்
- பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன்
- பள்ளூர் ஸ்ரீவாராஹி அம்மன்
- திருக்கள்வனூர் ஸ்ரீகள்வப் பெருமாள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கமன்னார்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாச பெருமாள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீகாட்டழகர் பெருமாள்
- அழகர்கோவில் ஸ்ரீசுந்தராஜப் பெருமாள்
- திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமியநாராயணப் பெருமாள்
- ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்
- மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி
- திருசித்ரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள்
- திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்
- காஞ்சிபுரம் ஸ்ரீநிலாத்துண்ட பெருமாள்
- ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள்
- திருநீர்மலை ஸ்ரீநீர்வண்ண பெருமாள்
- திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
- வானமாமலை தோத்தாத்ரிநாத பெருமாள்
- திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி
- பழனி தண்டாயுதபாணி சுவாமி
- சென்னிமலை சுப்பிரமணி சுவாமி
- திருப்போரூர் கந்தசுவாமி
- சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள்
- தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி
- சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி
- தேவிபட்டிணம் நவபாஷாண ஸ்தலம்