#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மசினகுடி

August 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மசினகுடி
214.#அருள்மிகு_மசினியம்மன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : மசினியம்மன்
உற்சவர் : மசினியம்மன்
தல விருட்சம் : அரளி மரம்
ஊர் : மசினகுடி
மாவட்டம் : நீலகிரி
ஸ்தல வரலாறு:
மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினி அம்மனை சென்று வழிபட முடியாத காரணத்தால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மசினியம்மனுக்கு கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். கருவறையில் நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட அம்மனின் சிலை உள்ளது.
கோயில் சிறப்புகள்:
•மைசூரு போல தசரா விழா இங்கு சிறப்பாக நடக்கிறது.
•தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரியம்மன், சிறியூர் மாரியம்மன், ஆணிகல் மாரியம்மன், சொக்கனல்லி மாரியம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய ஆறு அம்மன்கள் கருவறையைச் சுற்றி உள்ளனர். வெண்கலத்தாலான இந்த அம்மன் சிலைகளுக்கு தலைகள் மட்டுமே உள்ளன.
•ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசையன்றும் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது.
•இதில் ஞாயிறு மட்டும் பூசாரியின் பாதுகாப்பில் இருக்கும் ஐம்பொன் உற்சவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். அப்போது நடக்கும் பூஜையின் போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழக் கண்டால் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்ததாக நம்புகின்றனர்.
திருவிழா:
ஆடிஅமாவாசை, தைஅமாவாசை, மகாளயஅமாவாசை, மைசூரு போல தசரா விழா இங்கு சிறப்பாக நடக்கிறது.
ஸ்ரீமசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும் தொடர்ந்து, மாயார் சிக்கம்மன் கோவிலிருந்து, சிக்கம்மனை பழங்குடி மக்கள் ஊர்வலமாக, மசியம்மன். கோவிலுக்கு எடுத்து வருவர். தேர் முக்கிய சாலை வழியாக செல்லும். ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து புறப்படும் தேர் கோவிலை சென்றடையும்.
திறக்கும் நேரம்:
காலை 6:00 – இரவு 7:00 மணி
முகவரி:
அருள்மிகு மசினியம்மன் கோயில்
மசினகுடி,
நீலகிரி
போன்:
+91 99862 81182, 9843726625
அமைவிடம்:
ஊட்டியில் இருந்து கூடலுார் வழியாக மசினகுடி 75 கி.மீ., * மைசூருவில் இருந்து 99 கி.மீ.,
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #மசினகுடி #masinakudi #masinakudimasiniamman #masiniamman #மசினிஅம்மன் #மசினியம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 18 =