#அனுபவத்தை தேடி:
#அனுபவத்தை தேடி:
மகிழ்ச்சி என்பது
நீங்கள் விரும்பும்
அனைத்தையும்
பெறுவது அல்ல….
அது உங்களிடம்
உள்ள அனைத்தையும்
அனுபவிப்பதாகும்…!!
வாழ்க்கையை
அடுத்த தளத்தில் இருந்து அனுபவிப்பதற்காகவும்
அனுபவம்
அதிகரிக்க அதிகரிக்க…
உதடுகள் தன் பேச்சை
சுருக்கி கொள்கிறது
என்பதை இப்போது நன்கு உணர்ந்ததால் பேச்சைக் குறைத்துக் கொண்டு பிரயாணப்படுவதற்காகவும்
மறதியும் சிரிப்பும்
இல்லை என்றால்
மனித இனமே
மாறி இருக்கும் விலங்கினமாய்
என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் சற்று மறந்து போன சிரிப்பை உள் உணர்ந்து சிரிப்பதற்காகவும்
அறிவாளிகளுக்கு
அறிவு அதிகம்
ஆனால் முட்டாள்களுக்கு
அனுபவம் அதிகம்
என்று நான் படித்த
பாடத்தை மறந்து
இதுவரை நான் அறிவாளி
என நினைத்து இருந்ததை
தாமதமாக தெரிந்து
கொண்டாலும் சில
அனுபவங்களை பெற
முழு முட்டாளாக என்னை
மாற்றிக் கொள்வதற்காகவும்
எனக்கே எனக்கான
ஒரு பிரயாணம் இன்று முதல்…
மத்திய பிரதேசத்தை நோக்கி
சொக்கு மக்காக தன்னை மாற்றிக்கொள்ள முதல் பயணம்
அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போதும்
கூட கிடைப்பதில்லை…
அதுபோல் தான் என் வாழ்க்கையும்
பேரின்பம் வேண்டாம்
சிறு சிறு மகிழ்ச்சிகள் போதும் வாழ்வை முழுவதும் அனுபவிக்க
என்பதை புரிந்து கொண்டு முதல் அடியை எடுத்து வைக்கின்றேன்
வெற்றி பெற வாழ்த்துங்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்