நன்றி தமிழக முதல்வருக்கு

November 20, 2021 0 Comments

நன்றி தமிழக முதல்வருக்கு

நேற்று (17/11/2021) மரம் விழுந்து ஏழு நாட்கள் ஆகியும் எடுக்க லஞ்சம் கேட்கிறார்கள் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு nசொன்னவுடனே மரம் அகற்றப்பட்டது.
மரம் விழுந்து கிடந்த தடயமே இல்லாமல் அகற்றப்பட்டு விட்டது
நன்றி வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் உண்மையாக செயல்படும் தமிழக முதல்வருக்கு.
இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது:
நம் வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நாம் நம்முடைய அரசாங்க அமைப்பை லஞ்சத்திற்கு அடிபணிய வைத்து விட்டோம்.
அதன் விளைவாக இன்று குத்துதே குடையுதே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு இருகின்றோம்
முதலில் மிகச் சாதாரண வேலைகள் கூட கையூட்டு கொடுக்காமல் நடக்காது என்கின்ற உங்கள் நம்பிக்கையை உடைத்து தூரப் போடுங்கள்
நீங்கள் சற்று முயற்சி எடுத்தால்
பெரிய வேலைகள் கூட கையூட்டு கொடுக்காமல் நடக்கும் என்பதற்கு இது மிகச் சரியான உதாரணம்
லஞ்சம் வாங்குபவர்களை விட கொடுப்பவர்களே மிகப்பெரிய தீவிரவாதிகள்.
என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்.
லஞ்சம் தவிர்ப்போம்
மீண்டும் ஒருமுறை நன்றி தமிழக முதல்வருக்கு….
என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + thirteen =