மழை- சிறகுகள் 13

November 11, 2021 0 Comments

மழை – சிறகுகள் 13

மழையை ரசிப்பது
ஆனந்தம் என்றால்
மழையில் நனைவது
பேரானந்தம்
இந்தப் பெரிய உண்மை
எத்தனை பேருக்கு வாழ்க்கையில் புரிந்திருக்கும் என எனக்கு தெரியாது
ஆனால் இன்று காலையில் சென்னை ராணி மெய்யம்மை திருமண மண்டபத்திற்கு வெளியே
பேரிரைச்சலுடன் பெரும் மழை பெய்தபோது
துளி பயமில்லாமல்
மழையை என் கைக்குள்
அடக்கிய தீருவேன்
என்று தாத்தாவின் மார்பிலே சாய்ந்தவாறு ஒரு வாலைச் சாமி செல்ல அடம் பிடித்தபோது
அதிர்ந்து தான் நான் போனேன்
அதன் அசாத்திய தன்னம்பிக்கையை கண்டு
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நன்றாக சாமியை உற்று நோக்கிய போது
நெப்போலியனுக்கு வாட்டர்லூ
என்பதைப் படித்து தெரிந்து வைத்திருக்கும் போல இந்த மழை
ஆழி மழை ஊரை அழிக்கலாம்
ஆனால்
ஊரையே உருவாக்குவளிடம்
பயந்து சரணடைவது ஒன்றே வழி என்பதை புரிந்துகொண்டு
வாலை சாமியிடம் வாலாட்டாமல்
தோல்வியை ஒப்புக்கொண்டு அதன் கைக்குள்
சிறை சென்ற பொழுது
ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன்
மழையை தன் புல் விரலுக்குள்
அடக்க ஆசைப்படும் அடக்க வல்லமை கொண்ட இதுபோன்ற குழந்தைகளைத்தான்
பிற்பாடு கால ஒட்டத்தில் மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்று இந்த சமுதாயம் குறுகி சிந்தித்து குறுக்கி விடுகின்றது
குழந்தையை அதன் குழந்தை வயதில் சாமியாக கும்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
மறுத்து குழந்தையை
குழந்தையாகவும் நடத்தாமல் சாமியாகவும் நடத்தாமல்
ஆசாமிகளின் ஆசைக்கேற்ப
அதையும் மாற்றி
ஆசாமியாக நடத்தும்போதும்
நடத்த முற்படும் போதும்
தான் விளையாட்டு திசைமாறி
எதற்காக இந்த பிறப்பு என்று
அந்த குழந்தைக்கு அதன் கடைசி மூச்சு வரை தெரியாமலேயே அது உரு மாறி
ஆச்சரியக்குறியாக வர வேண்டியது கேள்விக்குறியாக மாறிவிடுகின்றது
பிறருக்கு ஒளி விளக்காக இருக்க வேண்டியது
வெறும் ஒலி விளக்கமாகவே இருந்துவிட்டு வெறுமனே இருந்துவிட்டு
இடம் பெயர்ந்து விடுகின்றது
இங்கிருந்து எங்கோ
காக்கையும் குருவியும்
தவளையும் முதலையும்
பல்லியும் பாம்பும் கூட
தாங்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இந்த பூமியில்
பிறருக்கு பயனளிக்கும் வகையில்
வாழும் போதும் வாழ்ந்து விட்டு செல்லும் போதும்
ஏதோ ஒன்றை விட்டுச் செல்லும்போது
குழந்தைகளை மட்டும்
ஏன் அதன் வாழ்க்கையை வாழ அனுமதி மறுக்கின்றோம்
அடக்க முற்படுவதாலேயே
அதிக நேரங்களில் அவைகள் அத்துமீறுகின்றன
மடக்க நினைப்பதாலேயே
பல நேரங்களில்
மடை மாறுகின்றது
குழந்தைகளை குழந்தையாக
வளர்க்க வளர்த்தெடுக்க
முதலில் மழையை எதிர்க்க குடை கொடுப்பதை தடை செய்யுங்கள்
தடையால் குழந்தை குழந்தையாக இருக்கும்
அதன்பிறப்புக்கும் அதன் வாழ்க்கையிலேயே ஒரு சரியான விடை கிடைக்கும்
ஒரு சாதாரண மழை என்று நீங்கள் அலட்சியப்படுத்தினால்
நாளை நிச்சயமாக உங்கள் குழந்தையும் உங்களை அலட்சியப்படுத்தும்
குழந்தைகள் பிற்காலத்தில் சிங்கமாக இருக்க வேண்டும் என்று கூட நான் சொல்ல வரவில்லை
உங்கள் தடையால் பிற்காலத்தில் அது பிறரால் அசிங்கமாக பார்க்கப் பட்டுவிட கூடாது என்பதை தான் நான் சொல்ல விரும்புகின்றேன்
குழந்தைகளே
இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால்
தடை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால்
இனி அதை நொறுங்க நொறுங்க உடை
மழை உனக்கானது
உனக்கே உனக்கானது
உன் வாழ்க்கையை நீ வாழ்
எவருக்காகவும் எவர் வாழ்க்கையையும் நீ வாழ முற்படாதே.
வானம் வசப்படும் என்பது தவறு
நீயே வானம் என்பதே சரி
காலம் உணர்த்தும்.
என்றும் அன்புடன்
Drஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =