இறை குறிப்பு

October 23, 2013 2 Comments

இறை குறிப்புகளை புரிந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் ?

உலகில் நிகழக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் முன்னேற்பாடுடன் தான் இறைவனால் நடத்தப்படுகின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும், ஜீவன்களும் முன்னேற்பாடுடன் தான் படைக்கப்பட்டுள்ளன. மற்ற படைப்புக்களுக்கு துணையாக நாமும், நமக்கு துணையாக மற்ற உயிரினங்களும் உள்ளன. (உதாரணம்) கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் மொரீஷியஸ் நாட்டில் வாழ்ந்த பறவை டோடோ. அப்பறவை விரும்பி உண்ணக்கூடியது கல்வாரிய என்ற மரத்தில் விளையும் பழத்தை தான்.  அதை உட்கொண்ட பின், அதன் கழிவிலிருந்து விழும் விதைகள் மட்டுமே கல்வாரிய மரங்களாகியது என்பது வரலாற்று உண்மை. ஆனால் மனிதனின் அற்ப உணவு பழக்கத்தினால் அந்த பறவை இனமே அழிந்தது, இதனால் கல்வாரிய மரமும் அழிந்துபோனது. அது போன்று நமக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளான கடன் தொல்லை, குழந்தை பேறு தள்ளிபோதல், விபத்தில் மரணம் போன்ற நுற்றுக்கணக்கான பிரச்சனைகள் வருவதற்கு முன்னரே இறைவன் நமக்கு ஏதோ ஒருவகையில் இறைகுறிப்பு என்ற ஒன்றை தந்து கொண்டு தான் இருக்கின்றார். இந்த இறைகுறிப்பை நாம் எப்படி உணர முடியும்? இதனை அறிய வாஸ்து படி வீடு என்பது அவசியம். ஒருவனுக்கு வீடு இருந்தால் அதனை வாஸ்து படி மாற்றி அமைத்துகொள்ளலாம். வீடே இல்லை, வாஸ்து படி வீடு அமைய வேண்டுமென்றால் ஒருவன் தன்னை சீர்படுத்திக் கொள்ளவேண்டும், பிறர் பொருள், சொத்து மீது ஆசைப்படாமல் நல்ல முறையில் உழைத்து வாழ வேண்டும், பெற்றோரை மதித்து, உடன் பிறந்த சகோதர, சகோதிரிகளுக்கு என்றும் துணையாக இருந்து அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றை நாம் பின்பற்றினால் நமக்கு வாஸ்து படி வீடு கிடைக்கும்… வாஸ்து படி வீடு இருந்தால் தான் இறைகுறிப்புகளை நாம் பெற முடியும். இறைகுறிப்பை அறிந்தால் தான் இறைவனை உணர முடியும். இதற்கு நல்ல வாஸ்து படி உள்ள வீடே துணை செய்யும் என்பது ஒரு சிறிய கருத்தாகும்.

 

2 thoughts on “இறை குறிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =