#பதில் தேவையற்ற கேள்வி!!!!

September 5, 2023 0 Comments

#பதில் தேவையற்ற கேள்வி!!!!
மகிழ்ச்சி
என்பது சிலருக்கு புரியாத வார்த்தையாக இருக்கும்
அவர்கள் வாழும் நாள் முழுவதும்.
சிலருக்கு அவர்கள்
வாழும் ஒவ்வொரு
நொடியிலும் இருக்கும்.
பலருக்கு அவ்வப்போது
அவர்கள் வாழ்க்கையில்
கொஞ்சம் எட்டி பார்த்து
விட்டு செல்லும் அளவில்
மட்டுமே இருக்கும்.
இன்னும் சிலருக்கு
அது பொய்யாகவே தெரியும்
அவர்களின் வாழ்க்கையின்
இறுதி மூச்சு வரை.
இது இல்லாமால்
மிச்சம் மீதி
உள்ளவர்களுக்கு
கரை தாண்டவே முடியாத
கடல் அலைகளின் முயற்சி
போல வெறும் முயற்சியாகவே
கடைசி வரை இருக்கும்
இதெல்லாம்
ஒருபுறம் இருந்தாலும்
மகிழ்ச்சியை விட பெரியதான
பெரு மகிழ்ச்சி என்பது
எல்லோருக்கும் சாத்தியமா
என்பது பெரிய கேள்வியாகவே பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கும்.
என் முன்னோர் செய்த புண்ணியத்தின் விளைவாக பெரு மகிழ்ச்சி இப்போது எல்லாம் அடிக்கடி சாத்தியப்படுகின்றது எனக்கு.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன் நான் பெரிதும் மதிக்கக் கூடிய அற்புதமான மனிதரும், தமிழக பாஜகவின் பொது செயலாளரும் மற்றும் நபார்டு இயக்குனருமான பேராசிரியர் முனைவர் சீனிவாசன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்த விழாவில் மணமக்களுக்கு என்னையே தனித்தனியே தன் பெண்ணுக்கு தாய் மாமன் உறவாக இருந்து பூ மாலைகளை மணமக்களின் கழுத்தில் போட சொன்ன அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து எடுக்க முடியாது.
மதுரையை பின்னணியாக வைத்து குடும்ப படங்கள் சிலவற்றை பார்த்த பொழுதெல்லாம் நமக்கு இது போல் கூட யாரும் பிறக்கவில்லையே என்று மூளைக்குத் தெரியாமலே கண்ணீர் விட்டு கண்ணை மூடி தூக்கம் மறந்து தூங்கியது உண்டு.
அந்த வகையில் என்னுடைய மனதில் இருந்த இந்த நீண்ட நாள் குறையை என் ஆண்டாள் அவளுடைய சீனிவாசன் மூலமாக நிறைவேற்றி கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
எனக்கே எனக்கு என்று சில உச்சக்கட்ட மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு.
ஆண்டாளை உணர்ந்த போது
ஆண்டாள் மேல் உள்ள திருவேங்கடமுடையானின் காதலை சுவாசித்த போது
சந்திரசேகரனால் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அர்த்தத்தை
உள் வாங்கிய போது
ராமனாலும் குமாரனாலும் தூக்கி நிறுத்தப்பட்ட போது
அந்த வரிசையில் பாரதிக்கு
தாய் மாமனாக ஆக்கப்பட்ட போது
என்கின்ற வாக்கியத்திற்கும்
நிரந்தர இடம் உண்டு..
இது எப்படி சாத்தியமாயிற்று
என்கின்ற என் கேள்விக்கு
நான் பதில் தேடி
அலையப் போவதில்லை
காரணம் எல்லாக் கேள்விக்கும் பதில் தேடி கொண்டிருக்க அவசியமில்லை என்பதால் சில கேள்விகளை கேள்வியாகவே வைத்திருப்பதே வாழ்க்கையின் பெரிய சுவாரஸ்யம்
என்பது எனக்கு நன்றாக தெரியும் என்பதால் கேள்வியோடு பதிவை முடிக்கின்றேன்.
மணமக்களை நீங்களும் முழு மனதுடன் வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேபோல் இன்று (3/9/23) பிறந்தநாள் காணும் பேராசிரியர் சீனிவாசன் அவர்களும் சகல ஐஸ்வர்யங்களுடன் மிகச் சிறந்த நிம்மதியான நிறைவான மகிழ்ச்சியான ஆனந்தமான ஆரோக்கியமான வாழ்க்கையை
வாழ நானும் ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்.
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#பதில்_தேவையற்ற_கேள்வி #பேராசிரியர்சீனிவாசன் #பிறந்தநாள் #birthdaywishes #மகிழ்ச்சி #birthdaywishes #congrats #Congraulations #wishingcouples
#இல்லதிருமணவரவேற்புவிழா #NABARDDirector #Prof_Srinivasan #மணமக்கள் #தாய்மாமன் #உச்சக்கட்டமகிழ்ச்சியானதருணங்கள் #Happiestmoments #aandal #ஆண்டாள் #unanswerablequestions #bharathi #பாரதிக்குதாய்மாமன் #interestingmoments #HeartMeltingMoments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =