#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பழனம்

August 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பழனம்
210.#அருள்மிகு_ஆபத்சகாயேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : ஆபத்சகாயர்
அம்மன் : பெரிய நாயகி
தல விருட்சம் : கதலி (வாழை), வில்வம்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி
புராண பெயர் : திருப்பழனம்
ஊர் : திருப்பழனம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
கோவில் புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு லட்சுமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் இத்தலத்திற்குப் பிரயாணபுரி என்றும் இறைவனுக்கு பிரயாணபுரீசர் என்றும் பெயர் வந்தது. பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தில் கெளசிகர் பங்கைப் பத்திரமாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்தார். இதனை அறிந்து கொள்ளையடிக்க வந்த அசுரரை இத்தலத்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஐயனார் காளி மூலம் அளிக்கப்பட்டார்கள். பின்பு கௌசிகர் அமுதத்தை கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.
கௌதம நதி தீர்த்தத்தில் இருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் பெற்றோரை இழந்து அமைதி நாடி தல யாத்திரையாக வந்தான். அச்சிறுவன் திருப்பழனத்தில் ஒரு இரவு தங்கினான். அன்று கனவில் எமதர்மன் தோன்றி இன்று முதல் ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய் எனக் கூறி மறைந்தான். இதனைக் கேட்ட சிறுவன் பயம் கொண்டு திருப்பழனப் பிரானை சரணடைந்தான். சிவபெருமான் அசிரீரியாக நீ திருவையாற்றுக்குச் சென்றால் உயிர் பிழைத்துக்கொள்வாய் என்று அச்சிறுவனுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திற்கு உதவி செய்ததார். எனவே இத்தல இறைவன் ஆபத்சகாயர் என அழைக்கப்பட்டார்.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 50 வது தேவாரத்தலம் திருப்பழனம். அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் திருப்பழனம் என்று பெயர்.
•சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•பங்குனி புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.
•அம்பாள் பெரியநாயகி. ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி அருள் பாலிக்கிறார்.
•பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரம் இல்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.
•முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள் விநாயகர் வேணுகோபாலர் சந்நிதிகளும் பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும் நடராஜர் சபையும் பைரவர் நவக்கிரகமும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி நின்ற நிலையிலும் தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி நின்ற நிலையிலும் மேற்கு திசையில் அண்ணாமலையார் நின்ற நிலையிலும் வடக்கே பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளனர்.
•அர்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார்.
•சுவாமி சன்னிதிக்குப் பின்புரம் பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கவேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் இருக்கிறார்.
•சந்திரன் குபேரன் திருமால் திருமகள் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.
•தர்மசர்மா என்னும் அந்தணன் பூசித்து பேறுபெற்ற தலம்.
•இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.
•அப்பூதி அடிகளின் அவதாரத் தலம்.
•திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
•திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.
திருவிழா:
ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ,
திருவையாறு 613 204 .
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 4362 326 668
அமைவிடம்:
கும்பகோணம் – திருவையாறு சாலையில், திருவையாற்றுக்கு அண்மையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #AabathsahaayarTemple #ஆபத்சகாயர் #பெரியநாயகி #திருப்பழனம் #thirupalanam #PeriyanayakiAmman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =