பஞ்சாப் கிரில் (Punjab Grill)பீனிக்ஸ் மால்,சென்னை
பஞ்சாப் கிரில் (Punjab Grill)பீனிக்ஸ் மால்,சென்னை
நேற்று (22/06/2023) குடும்ப உறுப்பினர்களுடன் (மொத்தம் ஐந்து பேர்) மதிய உணவிற்காக சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள பஞ்சாப் கிரில் என்கின்ற உணவகத்திற்கு செல்ல நேரிட்டது.
உணவு அருந்திய பிறகு எங்களுக்கு கொடுக்கப்பட்ட பில்லில் ஏறத்தாழ ரூபாய் ஆயிரம் ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என போடப்பட்டிருந்தது.
ஏன் என்று கேட்டபோது இது மத்திய அரசாங்கத்தின் விதி என்று பில் போட்டு என்னிடம் கொடுத்தவர் சொன்னார். அப்படி எதுவும் விதி இல்லையே என்று சொன்னபோது இல்லை விதி உண்டு. எல்லா ஓட்டலிலும் இந்த விதி உண்டு என்று எனக்கு பதில் கூறப்பட்டது.
நான் அதற்கு பதிலாக, நாங்கள் தினமும் உணவகங்களில் மட்டும் சாப்பிடுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கின்றோம்.
இது போல சட்ட திட்டத்தை மத்திய அரசும் விதிக்கவில்லை.
எந்த ஹோட்டலிலும் இதுபோல service charge என்று வசூலிக்கப்படுவதும் இல்லை.
ஆகவே நீங்கள் கூறுவது தவறு.
நானும் மத்திய அரசுடன் சம்பந்தப்பட்ட நபர் தான். தேவைப்பட்டால் உங்களுடைய பகல் கொள்ளையை குறிப்பாக மத்திய அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை வேண்டும் என்றே தேடித் தரும் நோக்கத்தில் நீங்கள் செய்யக்கூடிய பிசினஸ் தீவிரவாத செயலை மத்திய அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று சொன்னவுடன்,
வேண்டாம் சார்.
நாங்கள் போட்ட சர்வீஸ் சார்ஜை (தோராயமாக ஆயிரம் ரூபாய்) குறைத்து பில் போட்டு கொள்கின்றோம்.
நீங்கள் சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் மீத பணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பில்லை திருத்தி கொடுத்தார்கள்.
இந்த இடத்தில் ஒரு சாமானியனாக
சில கேள்விகள்
1. எத்தனை லட்சம் ரூபாய் இந்த உணவகம் சர்வீஸ் சார்ஜ் என்கின்ற பெயரில் மத்திய அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை உண்டு பண்ணி மக்களிடமிருந்து கொள்ளையடித்திருக்கும்.
மத்திய அரசாங்கம் இது போன்ற உணவகங்கள் மேல் எப்படி நடவடிக்கை எடுக்கப் போகின்றது??
2. அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கின்றேன்.
எப்படி திரு விஜயகாந்த் அவர்களை திருட்டு பத்திரிகை கூட்டம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை குடிகாரராக சித்தரித்து வெகு லாவகமாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தினார்களோ, அதேபோல இது போன்ற உணவகங்கள் தான் மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்தவித தவறும் செய்யாமல் இருக்கின்ற போதும் திட்டமிட்டு மத்திய அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
அரசியல் ரீதியாக ஒரு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு எல்லோருக்கும் சம உரிமை உள்ளது. செய்யாத தவறை அரசாங்கம் சொல்லி தான் நாங்கள் செய்கின்றோம் என்று ஒருவரோ ஒரு நிறுவனமோ குற்றம் சாட்டும் பொழுது அது கொலை குற்றத்தை விட மோசமான குற்றமாக நாம் கருத வேண்டும்.
இது போன்ற அநியாயத்தை தடுக்க வேண்டிய அரசு துறைகள் இது குறித்த பார்வை சிறிதும் இல்லாமல்
என்ன வெட்டி முறித்துக் கொண்டிருக்கின்றன?
3. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை விட பெரிய தீவிரவாதமாக கருதப்பட வேண்டிய இந்த செயலை செய்த இந்த நிறுவனம் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை இந்த நிறுவனத்தை உடனே சீல் செய்ய வேண்டும்.
பின் இந்த நிறுவனம் செய்த தவறை பத்திரிகையின் வாயிலாக சுட்டிக்காட்டி இது போன்ற தவறை வேறு யாரும் செய்யக்கூடாது என்று ஒரு முன் உதாரணத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்.
4. இதுபோன்று சர்வீஸ் சார்ஜ் என்று வசூலிக்கும் நிறுவனங்களையும் கண்டுபிடித்து திருத்த வேண்டும்.
நல்லாட்சி என்பது அரசாங்கத்தின் கையில் இல்லை. குடிமக்களின் கையில் தான் உள்ளது என்பதை அரசுக்கும் இது போன்ற அயோக்கிய நிறுவனங்களுக்கும் உணர்த்துவோம்.
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#punjabgrill #phoenixmall #servicecharge #GST #Centralgovermenttax #CM #PM #Tax #உணவகம் #Hotel #Awareness #finance #சென்னைபீனிக்ஸ்மால் #Mall #Beaware
#nirmalaseetharaman #VanathiSrinivasan #நிர்மலாசீதாராமன் #வானதிஸ்ரீனிவாசன்