விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! (வளர்பிறை த்வீதியை) 

December 7, 2018 0 Comments

விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! (வளர்பிறை த்வீதியை) :
நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம்.
ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம்.
கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி – ஐ வைத்து அதற்குண்டான திதி தேவதைகளின் படத்தை பார்த்து அதற்கான ஸ்லோகம் கூறி வந்தால் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும்.
இதைதான் விதி படி சிறப்பாக வாழ திதி தேவதை வழிபாடு அவசியம் என் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்
உங்களுக்குண்டான பிறந்த திதியை வைத்து நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நிச்சயம் பிரமாண்ட வெற்றிகள் கிடைக்கும்.
திதிகள் மொத்தம் 15 உண்டு.
1. அம்மாவாசை / பௌர்ணமி
2. பிரதமை
3. த்விதீயை
4. த்ருதீயை
5. சதுர்த்தி
6. பஞ்சமி
7. ஷஷ்டி
8. ஸப்தமி
9. அஷ்டமி
10. நவமி
11. தசமி
12. ஏகாதசி
13. த்வாதசி
14. த்ரயோதசி
15. சதுர்த்தசி
இந்த திதிகள் வளர்பிறையில் 15 திதி மற்றும் தேய்பிறையில் 15 திதி என்றவாறு மாறி மாறி வரும்..
வளர்பிறை என்றாலும் சுக்லபட்சம் என்றாலும் பூர்வ பட்சம் என்றாலும் ஒன்றுதான்.
தேய்பிறை என்றாலும் கிருஷ்ணபட்சம் என்றாலும் அமர பட்சம் என்றாலும் ஒன்றுதான்.
வளர்பிறையில் வரும் திதிக்கும் தேய்பிறையில் வரும் திதிக்கும் தேவதைகள் மற்றும் ஸ்லோகங்கள் வேறுபடும்.
உங்கள் ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரம், ராசி, லக்னத்திற்கு கீழ் நீங்கள் பிறந்த திதி குறிப்பிடப்பட்டு இருக்கும் (வளர்பிறை ……… திதி அல்லது தேய்பிறை ……. திதி என்று இருக்கும்).
திதி தேவதை படங்கள் வலைத்தளங்களில் கிடைக்கும் ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள ஸ்லோகம் தவறாக உள்ளது.
சரியான திதி தேவதை படங்கள் மற்றும் ஸ்லோகங்களை சாக்த வழிபாட்டு முறையை பின்பற்றக்கூடிய என் குரு காஞ்சிபுரம் திரு.வெங்கடரமணன் சாஸ்திரிகள் எனக்கு கொடுத்ததை நான் இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு உதவிய நண்பர்களுக்கும், ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் என் வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே எந்தவித பணமும் பெறாமல் கொடுத்து கொண்டு வந்துள்ளேன்.
திதி பற்றி நான் தொலைக்காட்சியில் பேசியதை வைத்து நிறைய பேர் வாட்ஸ்அப் மூலமாக எனக்கு திதி தேவதை வேண்டும் என்று கேட்பதாலும் அப்படி வரும் கோரிக்கைகள் ஒவ்வொரு நாளும் மிக அதிகமாக ஆவதாலும்/இருப்பதாலும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இந்து மதத்தின் மிகப்பெரிய சூட்சுமத்தை உங்களுக்காக கட்டவிழ்த்து விடுகின்றேன்.
இனி ஒவ்வொருநாளும் ஒரு திதிக்கு உண்டான தேவதையையும் அதன் ஸ்லோகத்தையும் உங்களுக்கு இந்த சமூக வலைத்தளங்களின் வாயிலாக தருகின்றேன்.
இன்று – வளர்பிறை த்வீதியை, திதி -க்கு நித்யா தேவதை – நித்யக்லின்னா
உங்களுடைய பிறந்த திதி நித்யா தேவதையை வழிப்பட்டு நீங்கள் வாழ்வில் பிரமாண்டமான வெற்றி பெற என் அன்பான வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =