மோடியின் மகள் என்ற பெயரில்…
தந்தை இல்லாத 5 வயது முதல் 12 வயது வரை இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மோடியின் மகள் என்ற பெயரில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் அக்கா வானதி ஸ்ரீநிவாசன் Vanathi Srinivasan அவர்களையும் ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் Andal P Chockalingam அவர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்…
ஆர் எஸ் எஸ், பாஜக என்றாலே ஏதோ மதவாதிகள் என்று ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறார்கள்… ஆர் எஸ் எஸ் அமைப்பில் தான் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இருக்கும் அமைப்புகளும் இருக்கிறது…
மோடியின் மகள் உதவி திட்டத்தில் கூட சாதி, மதங்கள் கடந்து தந்தை இல்லாத கிறிஸ்தவ, இஸ்லாமிய குழந்தைகளுக்கும் உதவி செய்கிறார்கள்…
இந்தியர்களாக ஒன்றுப்பட்டு இல்லாதவர்களுக்கு ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுக்கும் இவர்கள் அனைவரையும் போற்றி வணங்குகிறேன்…
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு
(குறள் எண் 211)
மழை பெய்து இந்த உலகைச் செழிக்கச் செய்கிறது. அந்த மழைக்கு இந்த உலகம் பதிலுக்கு என்ன செய்து விட முடியும்? மழைபோன்ற சான்றோர்கள் கைம்மாறு கருதாமலேயே உதவி செய்கின்றனர்.
கபிலர், ஒப்புரவுப் பண்பு நலனில் உயர்ந்தோங்கி வாழ்ந்த வள்ளல் பாரியை மழையோடு ஒப்பிடுகிறார். பாரி பாரி என்று பாரியை மட்டுமே கொண்டாடுகிறீர்களே? மழையும் உண்டே? அதுவும்தான் பாரியைப் போல் உலகைக் காக்கிறது. மழையையும் கொண்டாடுங்கள்’ என வஞ்சப் புகழ்ச்சி அணியாக பாரியின் ஒப்புரவுத் தன்மையைப் போற்றுகிறார்.
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.