முன்னேற ஒரே வழி #சிறகுகள் 12

November 8, 2021 0 Comments

முன்னேற ஒரே வழி
முன்னேற வழி ஒன்றே ஒன்று சொல்லவும் என என்னை சொல்ல சொன்னால்
மன்னிக்க மட்டும் கற்றுக் கொள் என்பேன்.
ஏனென்றால் நம்மை ஏமாற்றியவர்கள் கூட ஒரு காலத்தில் நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் தான்.
எல்லா நாய்க்கும் ஒருநாள் உண்டு என்பதற்கேற்ப நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும் உங்களை
கழுத்தறுத்தவர்கள் ஒரு நாள் வருவார்கள் மீண்டும் உங்களை நாடி/தேடி, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும்/அமையும் பட்சத்தில்
நிச்சயம் வருவார்கள் குளம் நிரம்பிய உடன் மீன்பிடிக்க
தயவுசெய்து பழைய பாசத்தில் குளத்தில் குளிக்க அனுமதி கேட்கும்போது
அந்த இடத்தில்
குளத்தை பார்வையிட மட்டும் அனுமதிக்கவும்
அதற்கு மேல் என்றால் குளம் குழம்பி தான் போகும்-
இவன் பட்டும் திருந்த மாட்டான் போல என்று.
என் நண்பன் அடிக்கடி சொல்வான்
நரி குணமும் ஒருவனுக்கு வேண்டும் என்று.
அது
அடுத்தவனுக்கு பள்ளம்
தோண்டுதற்காக அல்ல
அடுத்தவன் நமக்காக எடுத்த பள்ளத்தில் நாம் விழுந்து விடாமல் இருப்பதற்காக
எப்போதும் உன் இரக்கம்தான் உன்னுடைய பெரிய எதிரி என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்
வம்பாக நுழைந்து வகையாக வாங்கிக் கட்டிக் கொள்ளாதே
உன் அளவுக்கதிகமான
இரக்க குணத்தால் கடலையும் கண்ணீர் சிந்த வைத்து விடாதே என் அன்பே
இது மட்டும் புரிந்தால் போதும்
நீ வாழ்க்கையின் அடுத்த கட்டம் முன்னோக்கி நகர.
இந்த உலகு ஏமாற்றுபவனுக்கே ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்போது
ஏமாந்த உனக்கு ஒரு வாய்ப்பை கொடுக்காத என்ன
மன்னித்துவிடு உன் முதுகில் குத்தியவர்களை
நீ நேசித்து உன்னை ஏமாற்றியவருக்கு இன்னொருமுறை உன்னை ஏமாற்ற வாய்ப்பை கொடுக்காமல்
நேசித்து மன்னித்துவிடு.
வெற்றி உன் பக்கம்
தொடர் வெற்றி உன் பக்கம்
விஸ்வரூப வெற்றி உன் பக்கம்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =