கடிதம் – 27 – வேரும், நீரும்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
கொடுத்ததை புரிந்து கொடுத்தால்
கொடுப்பதை அறிந்து கொடுத்தால்
கொடுப்பதை தெரிந்து கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? என்கின்ற
கேள்விக்கான விடை
“சாவ்ஜி டோலக்கியா”
www.ndtv.com – ல் அக்டோபர் மாதம் 22 –ந் தேதி “சாவ்ஜி டோலக்கியா” பற்றி வந்த செய்தியை உங்களுக்காக ஆங்கிலத்தில் தருகின்றேன். இந்த செய்தியின் சுருக்கமான தம்ழாக்கத்தை அதன் கீழே கொடுத்து இருக்கின்றேன்.
| NDTV.com | Updated: October 22, 2014 20:54 IST
Am A School Dropout, Says Diamond Merchant Everyone’s Talking about
A diamond merchant in Gujarat has gifted over 1,000 employees cars, homes and jewelery as Diwali bonus in a stunning act of generosity, Oprah-style.
Savjibhai Dholakiya says his workers deserve big rewards for their hard work and loyalty.
Here are highlights of his interview with NDTV’s Ravish:
- I have studied till the 4th Grade. I dropped out of school when I was 12 and joined the diamond industry..
- All four brothers put together will not make a graduate. My youngest brother is the most educated – he made it to the 10th Grade.
- In 1991 when we started the company, our exports were worth Rs. 1 crore, now it’s close to Rs. 6000 Crore.
- The employees who I gave gifts to – I did their kind of work in Surat for 10 years with my brothers
- Our employees are responsible for this growth.
- We analyzed the work done by these 1200 people and realized that they had a major role in taking us forward.
- Everyone got together and analyzed who are the people responsible for our growth. We know who has added what value to the company.
- People should hear about these 1200 people and be inspired. Everyone should feel responsible for their own work. People have skills but they need motivation.
- These are my employees. They will not let me suffer losses.
- What we have given them is nothing compared to the effort put in by these people.
- You are speaking to a person who has had little formal education but I read every day, learn every day. I inspire myself, motivate myself.
- In the next five years, you’ll see how this impacts the diamond industry.
- I wanted to give cars to everyone but then we found out that about 200 employees don’t have their own houses.
- Then we found out that there were 500 people who had both houses and cars. So we then thought we should give them jewelry for their wives.
- Wives support the workers who work here. We do not give priority to wives in Gujarat so we thought this should be our priority.
- I have workers from 21 states in India and 361 villages. Everyone’s parents know me because I take them on pilgrimages to Haridwar. We’re indebted to their parents too.
- When you give money to someone, the responsibility of the person who takes that money increases.
- I am a businessman. I want more therefore I’m paying more. I’m not doing anyone a favor.
- I’m trying to show businessmen what they can do. I’m also telling all workers to work hard like my workers do so that your bosses are compelled to act…
- I train my workers – they do not chew tobacco, they respect their parents…
- This is not a big reward…what I have given is very modest,” he said. “Our workers are being rewarded for their loyalty, their hard work. Sharing never decreases your wealth. I have learnt that. Every time I have given something away, I have got back much more.”
- I have experienced it in my life that I will not have less if I give.
- It is the law of nature. When I sow one seed, I’ll have hundred.
- This is God’s blessing that I have come this far from zero. I had nothing. This is God’s gift.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு… வீடு வைத்திருந்தால் கார்…. வீடும் காரும் வைத்திருப்பவர்களுக்கு வைர நெக்லஸ் என்று தீபாவளி போனஸ் கொடுத்திருக்கிறது மும்பை நிறுவனம் ஒன்று. 50 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸை, வைரம் வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம் வாரி வழங்கி உள்ளது!
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் பெயர், “ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்”. தரமான வைரங்களை உற்பத்தி செய்து பட்டை தீட்டி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் சாவ்ஜி டோலக்கியா, குடும்பச் சூழல் காரணமாக, பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பைக்கூட தாண்டாதவர். படிப்பைப் பாதியில் முடித்த அவர், 12 வயதில் வைரம் பட்டை தீட்டும் வேலையில் ஈடுபட்டார். அதில் நன்கு அனுபவம் பெற்ற பிறகு, தன் மூன்று சகோதரர்களுடன் இணைந்து 1992 –ம் ஆண்டு “ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்” என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கிறது. தீபாவளிக்கு, கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சமமான போனஸை அது வழங்கியுள்ளது. 1198 பேர்களுக்கு இந்த லக்கி பிரைஸ் அடித்துள்ளது.
491 பேர்களுக்கு ஃபியட் கார், 500 பேர்களுக்கு “கிஸ்னா” வைர நகை, 207 பேர்களுக்கு 2 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வழங்கியுள்ளார்கள்.
இவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் எடுத்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழ்கண்டவாறு:-
- எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணம் வேண்டும்.
- பெற்றோர் மற்றும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.
- நல்ல பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.
- கடுமையான, நேர்மையான உழைப்பு இருக்க வேண்டும்.
- வெற்றி பெற படிப்பு கண்டிப்பாக தேவை என்கின்ற அவசியம் இல்லை. (ஜெயிக்க / வெற்றி பெற வேண்டும் என வெறி இருக்கிறவர்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும்)
- தொழில் மேல் அசாத்திய நம்பிக்கையும் வேண்டும்
- தொடர்ந்து சுயமாக கற்றுக்கொண்டு நம்மை புதுபுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
- எப்பொழுதெல்லாம் எது கொடுக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம் அதுவே பலமடங்காக திரும்பி வரும்.
- Zero கூட ஒருநாள் Hero – ஆக மாறும் – நம் மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால்.
மேற்சொன்ன 9 வரிகளையும் இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்
“கொடு”
நல்லதை “கொடு”
நல்லதை மட்டும் நிறைய “கொடு”
நீங்கள் அப்படி செய்யும் போது அது உங்கள் வேருக்கு நீங்கள் ஊற்றும் நீராக மாறும். நீங்கள் நீடித்து நன்கு வளர இந்த நீரை தவிர வேறு எந்த நீரும் பயன்படாது. பயன் தரவும் தராது. ஆகவே
பணத்தை இரட்டிப்பாக்க அடுத்தவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அடுத்தவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்
அன்பை இரட்டிப்பாக்க அடுத்தவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்
நிம்மதியை இரட்டிப்பாக்க அடுத்தவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்
நாம் அனைவரும் “சாவ்ஜி டோலக்கியா” ஆக வேண்டுமானால் தயவுசெய்து
ஒன்றை செய்யுங்கள் (கொடுங்கள்)
அதை
நன்றே செய்யுங்கள் (கொடுங்கள்)
அதையும்
இன்றே செய்யுங்கள் (கொடுங்கள்)….
கொடுத்தவனுக்கு மட்டும் தான் கொண்டாட்டம்
கொடுக்காதவனுக்கு என்றுமே நித்தம் திண்டாட்டம் தான் என்பதை நினைவில் நிறுத்தி கொண்டு
கொடுக்காதவர்களின் கதி என்ன? அடித்து, ஏமாற்றி, பிடுங்கி உயிர் வாழ்ந்தவர்களின் கதி என்ன என்பதை 1923 – ம் வருடம் நடந்த சம்பவங்களை உள்ளடக்கி
வேரும், வெந்நீரும் என்ற என் அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்