ஐஸ்வர்யா:

October 9, 2021 0 Comments

ஐஸ்வர்யா:
கனன்று கொண்டிருக்கும்
கலவர பூமியில் இருந்து
சேற்றில் முளைத்த
செந்தாமரையாய்
உன்னை பார்க்கிறேன்.
கள்ளம் கபடமற்ற என்
கண்மணியே உன்னை நான் பார்த்து உள் வாங்கி பேசிய அந்தப் பொழுது என் வாழ்க்கையில் நான் வாழ்ந்ததற்கான அர்த்தத்தை என் ஆண்டாள் எனக்கு உன் வாயிலாக
புரிய வைத்ததாக நினைக்கின்றேன்.
மெத்தப் படித்தவள்
நல்ல வேலையில் இருப்பவள்
நன்றாக வளர்க்கப்பட்டு இருப்பவள்
பசும்பொன் முத்துராமலிங்க தெய்வத்தின் தைரியத்தை உன் தாய் அவள் தந்த பாலோடு சேர்த்து கொடுத்து இருப்பாள் உனக்கு
என்று சொல்லும் அளவிற்கு
மனதில் தில்
அடுக்கிக் கொண்டே போகலாம் உனக்கான முன்னுரையை....
எத்தனையோ ஆளுமைகளை அதன் கோட்டையிலேயே சந்தித்திருக்கின்றேன் இதுவரை
அந்த சந்திப்பு எதுவும் இதுவரை கொடுத்திடாத மகிழ்ச்சியை
நீ என்னை என் கோட்டையில் சந்தித்தபோது
உன் சந்திப்பு கொடுத்தது.
காரணங்களை அடுக்கலாம்
தாமிரபரணி
அம்பை
பாபநாசம்
என்று.....
இருந்தாலும் இது எதுவும் என்னை அசைத்து நகர்த்தி இருக்க முடியாது பொதுவாக.
ஆனால் நீ சொன்ன ஒரு வாசகத்தை நினைத்து நினைத்து நெக்குருகி தான் போனேன்
உங்களால் தான் நான் சிரிக்கவே துவங்கினேன் என்று நீ சொன்ன
வாசகம் தான் உண்மையிலேயே இந்த உலகத்தையே வசியப்படுத்த கூடிய மிகப் பெரிய ரகசியம்.
உனக்கு 20 ல் புரிந்த இந்த ரகசியம்
பல கோடி பேருக்கு இப்போது வரை புரியாமலே இருக்கின்றது
எத்தனை கோடி பேருக்கு இந்த உண்மை தெரிகிறது.
தெரிந்திருந்தாலும் மறந்து இன்றும் பிணமாக
தானே ஓடி கொண்டிருக்கின்றார்கள்
என்றைக்கு நீ சிரிக்க ஆரம்பித்தாயோ
பாராட்டுக்குரிய
உன் சிரிப்பு பல நூறு பேரை சிரிக்க வைக்கும்
சிரிக்கத் துவங்கிய உடன் கொடுக்க நினைத்து
கொடுத்த உன்னால்
உன்னை போன்றவர்களால்
இந்த பூமி சிந்திக்கத் துவங்கும்
ஒருவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டாலேயே ஓராயிரம் சாதனையாளர்கள் அங்கு உருவாகிவிட்டார்கள் என்று அர்த்தம்.
அந்தவகையில் ஓராயிரம் சாதனையாளர்கள் உருவாக வித்திட்ட உனக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவன் நான்.
உன் பயணம் தொடரட்டும்
உன் வாழ்க்கை சிறக்கட்டும்
உன்னால் பலரது வாழ்க்கை செழிக்கட்டும்
என்றென்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + seventeen =