ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன்

April 28, 2023 0 Comments

ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன்
நம் எண்ணங்களில் எப்போதும் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதபிரான் பட்டர் சுவாமிகள் ஆண்டாள் கோவில் சன்னதியில் வைத்து ஒரு முறை குத்தாலம் தேரழுந்தூர் (கம்பர் பிறந்த ஊர்) ஆமருவியப்பன்
திவ்ய தேசம் சென்று வாருங்கள்
என்று சொல்லி இருந்தார்
இங்கு உள்ள பிரகலாதனும் கருடாழ்வாரும் நரசிம்மரும் ஆண்டாளும் வெகு விசேஷம் என்று சொல்லி இருந்ததாக நினைவு.
என் ஆச்சாரியனின் கட்டளையை இன்று (26/04/2023) நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த கோவில் சென்றால் நிச்சயம் குழந்தை கிடைக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
உங்கள் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய திருக்கோவில் இந்த கோவில்..
இந்த கோவிலில் எனக்கு நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்து விரைவில் சொல்கிறேன்…
நன்றி ஆண்டாளுக்கு
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =