#என்னுடைய கதாநாயகி:
என்னுடைய #கதாநாயகி:
எனக்கு மிக மிக நெருக்கமானவர்கள்
என்னை கல்நெஞ்சக்காரன் என்று வர்ணிப்பது உண்டு
அவர்கள் பார்வையில் அது சரியே..
ஆனால் நிஜத்தில்
இந்த நொடி வரை
ஒவ்வொரு முறை
இந்த வீடியோவை பார்க்கும் போதெல்லாம் என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக
எப்படி கொட்டுகின்றது என்பதை நான் அறியேன்
என்னுடைய விடை தெரியாத கேள்விகளில் இது ஒரு கேள்வி என்பேன்
இந்தியில் இந்த செல்ல குழந்தை என்ன சொல்கின்றது என்று எனக்கு இதுவரை தெரிந்து கொள்ள ஆசை இல்லை
இருந்தாலும் வீரத்தின் மறுபக்கமாக இந்த குழந்தையை பார்க்கின்றேன்
கடந்த ஆறு வருடங்களாக எப்பொழுதெல்லாம் மனசு சோர்வாக இருக்கின்றதோ அப்போதெல்லாம் இந்த வீடியோவை பார்த்த பிறகு அந்த சோர்வு காணாமல் போய்விடும்
அதற்கு காரணம் நாட்டுக்காக தன் இளம் அப்பாவை அந்த குட்டி குழந்தை தவறவிட்ட பிறகும்
அவள் வாயில் இருந்து வரும் அந்த உச்சகட்ட தைரியமான உச்சரிப்பு தான் எனக்கு ஒரு உற்சாக டானிக்
அப்பாவை இழந்த நிலையில் இந்த குழந்தை நாட்டிற்காக ஏதோ கோஷம் எழுப்புகின்றது என்ற அளவிற்கு எனக்கு அவளுடைய கோஷம் புரிந்திருந்தாலும்
அப்பா இல்லாவிட்டாலும் வெறியோடு வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்கின்ற அவளுடைய நாட்டுப்பற்றுடன் கூடிய வளர்ப்பு தான் எனக்கு கலங்கரை விளக்கம் இன்றைக்கும்…
என்னுடைய ஆதர்சன கதாநாயகி இவள்தான்….
என்னுடைய அன்பு மகள் இவள் தான்
என்னுடைய அம்மா இவள் தான்
என்னுடைய ஆண்டாள் இவள் தான்
என்னுடைய காதலி இவள் தான்
இவளை தந்த என் தாய் திருநாட்டிற்கு என் மனமார்ந்த நன்றி
வீரத்தின் விளைநிலமான நம் ராணுவ கட்டமைப்புக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்
நம் தேசத்திற்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம்
பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலால் வீர மரணம் அடைந்த வீர பெண்ணின் வீர தந்தை Col MN Rai க்கும் நன்றியுடன் இருப்போம்
என்றாவது ஒரு நாள் என் செல்லத்தை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P
சொக்கலிங்கம்