#உஜ்ஜயினி_கோயில்கள்

December 31, 2022 0 Comments

நம் நாட்டில் உள்ள கோயில்களில்
அதி முக்கியமான கோயில்களாக மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு கோயில்களை சொல்வார்கள்
அதில் தலையாய மூன்று
உஜ்ஜயினில் உள்ளது
அந்த மூன்று
1.மகாகாலேஸ்வரர் கோயில்
2.கால பைரவர் கோயில்
3.மாகாளி அம்மன் கோயில்
இந்த மூன்று கோயில்களையும்
இன்று மிக அற்புதமாக
தரிசனம் செய்ய வைத்து
நல்ல உணவையும் கொடுத்து
மேலும் எல்லா விதமான ஏற்பாடுகளையும் முன்
நின்று செய்து கொடுத்த
மத்திய பிரதேசத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர்
திரு மோகன் யாதவ்
அவர்களுடைய அண்ணியும்
உஜ்ஜயினி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷனுடைய (UMC)
சபாநாயகரும்
ஆன அன்பு சகோதரி
திருமதி கலாவதி யாதவுக்கு
என் மனமார்ந்த நன்றி….
செல்வ செழிப்பு
உச்சகட்ட அதிகாரம்
உயர் பதவிகள்
என நூறு விஷயங்கள் தன்னிடமிருந்தாலும்
ஒரு துளி அகம்பாவம் இல்லாத ஆணவம் இல்லாத
அற்புதமான பெண்ணை
இன்று சந்தித்த போது தான்
நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் நான் என்பதை மீண்டும் ஒருமுறை
புரிந்து கொண்டேன்
நீ ஒன்றுமே இல்லை என்று மீண்டும் ஒரு முறை எனக்கு உணர்த்திய பிரபஞ்ச பேராற்றலுக்கு என் மனமார்ந்த நன்றி
நிறைய மாற
வேண்டும் நான்……
நன்றி நன்றி நன்றி
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =