பீம ரத சாந்தி வாழ்த்துக்கள்….

பீம ரத சாந்தி வாழ்த்துக்கள்.
திருச்சியை சேர்ந்த திரு ராஜேந்திரன் அவர்கள் ஆர்எஸ்எஸ் என்கின்ற மாபெரும் இயக்கத்தில்
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஏறத்தாழ 50 ஆண்டுகள் உழைத்துக் கொண்டிருப்பவர்.
தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று உரக்கச் சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பவர்.
சனாதன தர்மத்தை கட்டிக்காத்து கொண்டிருப்பவர்.
உலகெங்கும் பரவி கிடக்கும் இந்து சொந்தங்களுக்கு தன்னாலான முழு உதவிகளையும் இந்தியாவிலிருந்து செய்து கொண்டிருப்பவர்.
இவருடைய 2 மகன்களும் மனிதனுடைய உடலுக்கு மருத்துவம் பார்ப்பவர்கள்.
இவரோ இந்து மதத்தை அழிக்க துடிக்கும் பல செயல்களை சாத்வீக முறையில் சரி செய்து கொண்டிருப்பவர்.
நாட்டை தவிர வேறு சிந்தனையில்லாத திரு.ராஜேந்திரன் அவர்கள்
தற்போது ஆர்எஸ்எஸ் என்கிற மாபெரும் இயக்கத்தின் தென் பாரதத்தின் பொதுச் செயலாளராக (ஷேத்திர காரியவாக்) பணியாற்றி வருகின்றார்.
ஓய்வில்லாத உழைப்புக்கு சொந்தக்காரரான திரு.ராஜேந்திரன் அவர்களுக்கு இன்று மிக எளிமையாக பீமரதசாந்தி திருச்சி குணசீலத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகில் கொண்டாடப்பட்டது.
அவரும் அவருடைய இனிய குடும்பமும் வாழ்வாங்கு வாழ ஆண்டாள் மாலை கிளி மற்றும் அக்கார அடிசில் பிரசாதத்துடன்
CCGS அமைப்பின் திரு.சடகோபன், திரு தண்டபாணி, திரு.ஆனந்த், திருமதி பானு, திரு அருள்,திரு கிருஷ்ணகுமார், திரு ராஜேந்திரன் மற்றும் ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சிவகாசி ராஜ் பிரகாஷ் & சிவகாசி சுந்தர் அவர்களுடன் கலந்து கொண்ட போது எடுத்த படம்.
உடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தென் பாரதத்தின் தலைவர் டாக்டர் வன்னிராஜன், மூத்த கார்யவாக் திரு. சாம்பமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் திரு. ஆடலரசன் அவர்கள்
திருச்செந்தூர் முருகனுக்கும் பழனி முருகனுக்கும் என் தாய் ஆண்டாளுக்கும் நரசிம்மருக்கும் என் மனமார்ந்த நன்றி..
என்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P.சொக்கலிங்கம்