ஒரு கட்டிடத்தில் ஈசான்ய மூலை என்பது எது?

January 29, 2021 2 Comments

இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவு தாவரங்கள் முதல் பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும். இதன் அடிப்படையில் இயற்கையோடு ஒத்து நாம் ஒரு கட்டிடம் கட்ட நினைக்கும்போது பஞ்சபூதங்களின் தன்மைக்கு ஒப்பும் வகையில் அதனை நாம் நம் வசப்படுத்திக் கொள்ளுமாறு அமைக்க வேண்டும். அந்த வகையில் வாஸ்துவின் மூலைகளில் பிரதானமானது வடகிழக்கு மூலையாகும். இம்மூலை பஞ்சபூதங்களின் முதல் கூறான நீரின் இருப்பிடமாகும். வடகிழக்கு மூலையை “ஈசான்ய மூலை” என்றும் கூறுவர்.

ஈசான்ய மூலை என்றதும் இது ஈசனுக்குரிய மூலை என்று பலரால் கூறப்படுகின்றது. இது தவறான கருத்து என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும். வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் வரும் இடமாக கருதப்படுவதால். இந்த மூலையை ஒரு இடத்தின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மூலையாக கருதலாம். அது மட்டுமல்லாமல் இந்த மூலை நீரின் ஆதாரம் என்பதால், வடகிழக்கு வெளி மூலையில் ஆழ்துளை கிணறு, நீர் தேக்கும் தொட்டி, கிணறு போன்றவற்றை அமைத்துக்கொள்ளவது சால சிறந்தது. மேலும் வடகிழக்கு மூலை அறையை குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும் மற்றும் வடகிழக்கு அறையை தியானம் செய்வதற்கும், குழந்தைகள் / பெரியவர்கள் படுத்து உறங்கும் அறையாகவும் பயன்படுத்தலாம்.

இந்த மூலையில் வரக்கூடாதவை:

  • பூஜையறை
  • குடும்ப தலைவன்/தலைவி படுத்து உறங்கும் அறை
  • குளியலறை
  • சமையல் அறை
  • பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
  • உட்புற மூலை படிக்கட்டு
  • வெளிப்புற மூலை படிக்கட்டு
  • கழிவுநீர் தொட்டி (Septic Tank)
  • மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank)
  • மரங்கள்
  • Inverter / EB-Box / Generator<
  • போர்டிகோ (Portico).

2 thoughts on “ஒரு கட்டிடத்தில் ஈசான்ய மூலை என்பது எது?”

  1. ஐயா, வட கிழக்கு மூலையில் கழிவு நீர் அமைப்புகள் வரலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =