#அகில்யாபாய்_ஹோல்கர்:

December 31, 2022 0 Comments

காசி நகரத்தின்
சிறப்புக்குரிய விஸ்வநாதர் ஆலயம் ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது
தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே
தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல்
முழுவதுமாக கட்டியது மத்திய பிரதேசத்தை சேர்ந்த மகாராணி அகில்யாபாய் ஹோல்கர் என்பது நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாக இப்போது வரை இருக்கும்
காசி இந்துக்களுக்கு முதன்மையான
புண்ணிய ஷேத்திரமாக இருக்கலாம்
அப்படி காசிக்கு நாம் தேடி சென்று பெறும் பெரிய புண்ணியத்தில்
பெரும் பங்கு
இன்றைக்கும் என்றைக்கும்
அகில்யாபாய் ஹோல்கருக்கும் நிச்சயமாக போய் சேரும்
காரணம்
அவன் இன்றி எதுவும் இல்லை என்றாலும் அகில்யாபாய் ஹோல்கர் இன்றி காசியே இல்லை என்பது நான் மிகப்பெரிய உண்மை எனும் போது புண்ணியம் குறித்து நான் சொன்ன விஷயத்தில் நம் யாருக்கும் இரு வேறு கருத்து இருந்து விட முடியாது என் என்று சொல்லும் அளவிற்கு அகில்யாபாய் ஹோல்கரின் பங்கு மகத்தானது
அகில்யாபாய் ஹோல்கர் இந்திய சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய மிகப் பெரிய முக்கிய பெயர் என்பது தான் மறைக்கப்பட்ட பெரிய உண்மை…..
#சரித்திரம் அறிவோம்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + seven =