மண் – சிறகுகள் 3…..

மண்
சிறகுகள் 3
நாம் இந்த மண்ணில் விளைவதைத்தான் சாப்பிடுகின்றோம். அந்தச் சாப்பாடு நமக்குள் போய் நம்முடைய உடலை முழுமையடையச் செய்கிறது. நாம் சாப்பிடுகிற எல்லாமே மண்தான் என்பதை நாம் மறந்து மண்ணை
மலடாக்கி கொண்டிருக்கின்றோம்.
மண்ணை அதன் போக்கில் மண்ணாக இருக்க விட்டோம் என்றால் நாம் மண்ணாக மாறும் நாள் கொஞ்சம் தள்ளி போகும்.
மண் மண்ணாக இருக்க
நாம் மண்ணாக மாறுவதை தள்ளிப்போட முடிந்தால் மரம் வளர்ப்போம்.
முடியாவிட்டால் யாரோ வைத்த மரத்தை வெட்டாமல் பாதுகாப்போம்.
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
