Blogger Facebook Twitter YouTube

வாஸ்து தீர்வுகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த விஷயம் அல்ல. அதனை அறிவியலுக்கு உட்படுத்தியே கூற முடியும். சூரியனை மையமாக கொண்டு இயங்கும் பூமியில் வாழும் பகுத்தறிவு கொண்ட மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது விதிவிலக்கல்ல. வாஸ்துவில் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மந்திரம், தந்திரம், தகடு, தாயத்து, பூஜை மற்றும் இதற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. எதனை சுருக்கமாக கூறினால் பரிகாரங்களுகெல்லாம் அப்பாற்பட்டதே வாஸ்து.

வாஸ்து என்பது பரிகாரங்களுகெல்லாம் அப்பாற்பட்டது என்று கூறிவிட்டோம், பின்பு நாம் வசிக்கும் வீட்டில் ஏதேனும் சிக்கல், பிரச்சனை ஏற்பட்டால் அதனை பரிகாரங்களுக்கு அப்பாற்பட்டு எப்படி தீர்ப்பது? என்ற கேள்வி நம்முள் பலருக்கு எழும். இதோ உங்களுக்கான விடை…

ஹோமியோபதி மருதுவதியின் அடிப்படை தத்துவம் “ஒத்ததை ஒத்தது போக்கும்” என்பதாகும். மேலும் பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்து மற்றொரு பாம்பின் விஷம் தான் என்பது உண்மையாக இருப்பின் வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு அந்த வீட்டிலேயே தான் உள்ளது என்பது நான் கண்ட உண்மை. இந்த உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு என் பதிலாக மா சேதுங் – ன் வார்த்தைகளைத் தருகிறேன்.

“விரல் சந்திரனை சுட்டுகிறது.
முட்டாள் விரலை பார்க்கிறான்…..!”

error: Content is protected !!