அக்னி மூலை என்பது எது? அக்னி மூலையில் வரக்கூடியவை மற்றும் வரக்கூடாதவை யாவை?

January 2, 2014 51 Comments

தென்கிழக்கு மூலையே “அக்னி மூலை” ஆகும்… பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது. கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட மூலை “தென்கிழக்கு” மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்றும் கூறுவர். ஒரு வீட்டிலோ/ தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடதிற்குக் தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படையும் என்பதினை நாம் புரிந்துக் …

ஒரு கட்டிடத்தில் ஈசான்ய மூலை என்பது எது?

December 25, 2013 7 Comments

இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவு தாவரங்கள் முதல் பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும். இதன் அடிப்படையில் இயற்கையோடு ஒத்து நாம் ஒரு கட்டிடம் கட்ட நினைக்கும்போது பஞ்சபூதங்களின் தன்மைக்கு ஒப்பும் வகையில் அதனை நாம் நம் வசப்படுத்திக் கொள்ளுமாறு அமைக்க வேண்டும். அந்த வகையில் வாஸ்துவின் மூலைகளில் பிரதானமானது வடகிழக்கு மூலையாகும். இம்மூலை பஞ்சபூதங்களின் முதல் கூறான நீரின் இருப்பிடமாகும். வடகிழக்கு மூலையை “ஈசான்ய …

திசைகள் மற்றும் மூலைகள் யாவை?

December 23, 2013 12 Comments

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு. வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாஸ்துவின் அடிப்படையாக நான்கு திசைகளையும், நான்கு மூலைகளையும் கூறலாம். அவை, நான்கு திசைகள் • வடக்கு • கிழக்கு • தெற்கு • மேற்கு நான்கு மூலைகள் • வடகிழக்கு மூலை • தென்கிழக்கு மூலை • தென்மேற்கு மூலை • வடமேற்கு மூலை வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் …

வாஸ்து என்றால் என்ன?

December 17, 2013 0 Comments

வாஸ்து பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலரால் கூறப்பட்டு வந்தாலும் வாஸ்து என்பதற்கு அடிப்படையே சூரியன் மட்டும் தான். இன்றைய இயந்திர உலகத்தில், நாம் எப்போதுமே பிரச்சினைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சினைகளைத் தீர்த்து பிரச்சினையின்றி வாழ இயலாமல் போய்விட்டது என்பது தான் உண்மை. இந்த நிலையில் நமக்கு இயற்கையின் அடித்தளமாக விளங்கும் விலைமதிப்பில்லா சூரிய ஒளியை நாம் நம் வீட்டில் சரியான முறையில் பயன்படுத்தினாலே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதே …