கடிதம் – 6

August 18, 2014 0 Comments

கடிதம் – 6

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஆண்டாள் தங்க விமான திருப்பணி தடைபெற்று நிற்கின்றதே என்று நான் வருத்தப்படாதே நாட்களே இல்லை….  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக என் மனைவி, அம்மா, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள் என் ஞாபகத்திலேயே கிடையாது… இந்த சூழ்நிலையில் ஆண்டாள் கோவில் திருப்பணிக்காக யாரிடமும் சென்று ஆண்டாளுக்கு கொடுங்கள் என்று யாசகம் பெறவும் எனக்கு விருப்பமில்லை….

கிட்டத்தட்ட நான் உயிர் வாழ்வதே அர்த்தமில்லையோ என்று என்னை நானே நொந்து கொள்வது அன்றாட நிகழ்வாகி போனது. எத்தனையோ பேருக்குள் தன்னம்பிக்கையை புகுத்திய எனக்கு, என் ஆண்டாளுக்கு உண்டான திருப்பணியை செய்து முடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தினால் நிலை குலைந்து போய் கடமைக்காக ஊர் சுற்றி கொண்டியிருந்த வேளையில், ஒரு நாள் இரவு சேலத்தில் தங்க நேரிட்டது. அந்த நேரத்தில் நண்பர்களுடன் சாதாரணமாக பேசி கொண்டு இருந்த போது ஏன் எனக்கு தெரிந்த விஷயங்களை எனக்கு தெரிந்த client – களுக்கு மட்டும் பணத்திற்காக சொல்லி தரக்கூடாது என்று ஒரு Flash ஏற்பட்டது….  அந்த எண்ணம் தோன்றிய அடுத்த நொடியே என் பக்கத்தில் இருந்த இரண்டு சேலம் நண்பர்களிடம் அது பற்றி பேசி உடனேயே அவர்கள் ஒப்புதலையும் பெற்று விட்டேன்….   அவர்கள் ஒப்புதல் கொடுத்த அந்த நொடி முதல் அந்த விஷயத்தை எப்படி வெற்றி பெற வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். முடிவாக அதிகபட்சம் 300 பேரை கூப்பிடுவது என்றும், கண்டிப்பாக Clients – ஐ மட்டும் கூப்பிடுவது என்றும், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மேலும் பல நல்ல முக்கியமான விஷயங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது என்றும் முடிவு செய்தோம்….   அப்படி அந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10,000/- கொடுத்தாலும் ஒரே நாளில் ரூ.30 இலட்சம் (குறைந்தபட்சம்) திரட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் எனக்கு தெரிந்த சில Client – க்கு நானே சென்னை வந்த பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை பற்றி சொல்ல ஆரம்பித்தேன்…   அதில் ஒரு பெண்மணிக்கு நான் phone செய்த போது அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் சயன சேவையை பார்ப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்து எதுவும் கிடைக்காதா என்ற பரபரப்பில் நின்று கொண்டு இருந்தார்…  அவர் அந்த பரபரப்பிலும் நான் சொன்ன விஷயத்தை கேட்டுவிட்டு ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி சேலத்திற்கு கட்டாயம் வருவதாக வாக்குறுதி கொடுத்தார்…..

அந்த பெண்மணியை பற்றி ஒரு சிறு குறிப்பு:-

  • அவர் திருமணமானவர்
  • மூத்த பெண் திருமணம் ஆகி அமெரிக்கா – வில் வசிக்கிறார்
  • மகன் B.E., முடிக்க இருக்கிறார்
  • கணவருக்கு நல்ல நேர்மையான தொழில்
  • மொத்தத்தில் இந்த குடும்பம் ஒரு Upper middle Class குடும்பம்

எனக்கும், நான் குறிப்பிடும் இந்த பெண்மணியின் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு 3 வருடத்திற்குள் தான் இருக்கும்….

நான் குறிப்பிடும் பெண்மணி என்னுடைய தொலைபேசி உரையாடலுக்கு பிறகு 7 – 8 நாள் சென்று என்னை பார்க்க என் அலுவலகம் வந்து இருந்தார்….   வந்தவர் சார் நீங்கள் எனக்கு போன் செய்து பேசிய பிறகு ரொம்ப கஷ்டமாகி போய்விட்டது; ஆண்டாள் திருப்பணி நடக்கவில்லையே என்று நீங்கள் படும் கவலையினால் நான் கடந்த 5 நாட்களாக தூங்கவே இல்லை சார்….   என்று சொல்லிவிட்டு ரூ.1 லட்சத்தை எடுத்து என் கையில் கொடுத்தார்….   என்னம்மா எதுக்கு இந்தப்பணம் என்றபோது அவர் சொன்ன வார்த்தைகள் தான் கூர்ந்து கவனிக்கத்தக்கவை….

  1. என் கணவர் எங்களுடைய பெண் மாதமாக இருப்பதால் அவளை பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ள அமெரிக்கா போய் இருக்கின்றார்…   போகும் போது எனக்கு கையெழுத்து போட்ட 3 பிளான்க் காசோலைகளை கொடுத்து விட்டு தான் போனார்….  எங்கள் வங்கியிலும் பணம் உள்ளது… இருந்தாலும் நான் பணத்தை எடுத்துவிட்டால் அது ஏதாவது தொழில் சார்ந்த வகையில் தவறாகி போய் விட்டால் என்கின்ற பயத்தால் நான் என் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து இந்தப் பணத்தை கொடுக்கின்றேன் சார்…. எனக்கு இன்னும் ரூ.2 லட்சம் கொடுக்கணும்னு ஆசை…  நான் ஆகஸ்டு 24 நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் கண்டிப்பாக கொடுக்க முயற்சிக்கின்றேன் என்று உறுதியும் கொடுத்து விட்டு கிளம்பி விட்டார்…
  2. பணம் இருக்கிறவர்கள் பணம் கொடுப்பது பெரிய விஷயம் அல்ல….   ஆனால் இந்த பெண்மணி விஷயத்தில் கூர்ந்து நோக்க கூடிய விஷயங்கள் பின்வருமாறு:-
  • ஆண்டாள் திருப்பணி தடைபெற்று நிற்கின்றதே என்று கவலையில் தூக்கம் தொலைத்தவரும் இவர் தான்
  • ஆண்டாளுக்கு சேராத தங்கம் தனக்கும் தேவையில்லை என்று சொன்னவரும் இவர் தான்; ஆண்டாளுக்குரிய தங்கம் சேராத போது நான் மட்டும் நகைகளை அணிவது தவறு. அவ்வாறு அணியும் போதெல்லாம் அது தனக்கு உறுத்தலாக இருக்கின்றது என்று கூறி இதற்கு முன்னரே ஏறத்தாழ அவருடைய எல்லா நகைகளையும் ஆண்டாளுக்கு கொடுத்தவரும் இவர்தான்…
  • நகைகள் மேல் எனக்கு ஆசையே போய்விட்டது என்று கூறி நினைவு வரும்போதெல்லாம் ஆண்டாளுக்கு கொடுப்பதையே முக்கிய கடமையாக கருதுபவரும் இவர் தான்…
  • உலகமே தங்கத்தின் பின்னால் தவமிருக்கும் போது தங்கம் வேண்டாம் என்று சொன்னவரும் இவர்தான்…
  • இவர் மட்டும் தான் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆண்டாள் பி. சொக்கலிங்கம் சார் ஜெயா டிவியின் வாயிலாக 10 கிலோ தங்கம் கொடுக்கின்றேன் ஆண்டாளுக்கு என்று வாக்குறுதி கொடுத்து விட்டு வந்து விட்டாரே; சார் – ஆல் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று வருத்தப்பட்டு தூக்கத்தை தொலைத்தவரும் இவர் தான்….
  • இவர் கனவிலே ஆண்டாளே தோன்றி என் சொக்கலிங்கத்தை நான் பார்த்து கொள்கிறேன்; நீ கவலைபடாதே என ஆண்டாளாலே ஆறுதல் கூறப்பட்டவரும் இவர் தான்….

இந்தப் பெண்மணியின் வாழ்வில் இருந்து நமக்கு கிடைக்கும் சமிக்ஞைகள் கீழ்கண்டவாறு:

  • ஆண்டாளுக்கு இல்லை என்கின்ற ஒரு விஷயம் நமக்கு எதற்கு என்கின்ற இவரது எண்ணம் மனிதன் கடவுளாகி விட்டான் என்கின்ற நிலையை இவர் வாழும்போதே பெற்று விட்டார் என்று தான் கூறுவேன்.
  • ஆண்டாளுக்குகாக தன்னை வருத்தி கொண்ட இந்த பெண்மணியை பார்க்கும் போது எப்படி உறங்கா அரங்கனை அடைய ஆண்டாள் தன்னை வருத்தி கொண்டாள் என்கின்ற அந்த விஷயம் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றது….

தன்னை இவர் வருத்தி கொண்ட தன்னலமற்ற நிகழ்வில் மற்றொரு விஷயமும் புதைந்து இருக்கின்றது….

அது பிரதிபலன்  எதிர்பாரா அன்பு….

இந்த ஒரு விஷயம் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயம்….

நீ எனக்கு கொடு; நான் உனக்கு கொடுக்கின்றேன் என்று Corporate Company –  களின் Business deal ஆக இல்லாமல் என்னிடம் இருப்பது எனக்கு நீ கொடுத்தது; என்னிடம் இருப்பது எல்லாமே உனக்கு சொந்தமானது; உனக்கு மட்டுமே சொந்தமானது என்கின்ற இந்த உண்மையை உணர்ந்த இந்தப் பெண்மணிக்கு

கிடைத்த விஷயங்கள் என்ன?

நான் ஏன் சந்தோஷப்பட்டேன்?

விவரங்கள் என் அடுத்த கடிதத்தில்….

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =