கடிதம் – 2

August 16, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

24, ஆகஸ்டு 2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து, என்னிடம் வாஸ்து பார்த்தவர்களுக்கு மட்டும் (300 நபர்களுக்கு மிகாமல்) எனக்கு தெரிந்த வாஸ்து, ஆழ்நிலை ஆண்டாள் தியானம் கற்று கொடுக்க முடிவு செய்துள்ளேன்…

இதற்கு தலையாய காரணம் என் எதிர்கால குறிக்கோளை அடைய என்னை சற்று ஒருமுகப்படுத்த வேண்டி இருப்பது தான். அதிலும் குறிப்பாக நான் இன்றிலிருந்து அடுத்த 2 – வருடங்களுக்குள் வாஸ்து துறையில் இருந்து படிப்படியாக விலகினால் தான் என் வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும் என்பதில் நான் தெளிவாக, தீர்மானமாக இருக்கின்றேன்…

நான் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது என்னிடம் வாஸ்து பார்த்தவர்களால் என்கின்ற போது, என்னிடம் வாஸ்து பார்த்த அனைவரும் வளர்ந்து விட்டார்களா, வளர்ச்சி அடைந்து விட்டார்களா என்று பார்த்தோமேயானால் அதற்கு பதில் “இல்லை” என்பது தான்…. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு நான் வாஸ்து பார்த்து இருந்தாலும் அதிலிருந்து 300 பேரை மட்டும் சேலத்திற்கு வரவழைக்க வேண்டிய காரணம் என்னவென்று பார்த்தோம் என்றால் “இல்லை” என்ற சொல்லை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது தான் அதன் நோக்கமாகும்…

அது ஏன் இந்த பயிற்சி என்னிடம் வாஸ்து பார்த்தவர்களுக்கு மட்டும் என்றால்

என்னிடம் வாஸ்து பார்த்தவர்களுக்கு நான் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டிய / செய்து கொடுக்க வேண்டிய கடமை உள்ளது…. கட்டாயமும் உள்ளது…

அதிலும் குறிப்பாக

  •   அறைகுறையாக வாஸ்து குறைகளை சரி செய்து இருப்பவர்கள்
  •   வாஸ்து குறைபாடுகளை அறவே செய்ய முடியாத அளவிற்கு  வறுமையில் இருப்பவர்கள்.

– இந்த 2 வகை பிரிவில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை பார்த்தோமேயானால், இன்றும் அந்தக் குடும்பங்களில்

v  கடன் சுமை இருக்கும்

v  தொழில் நஷ்டம் இருக்கும்

v  வேலையின்மை இருக்கும்

v  குழந்தையின்மை இருக்கும்

v  திருமண தடை இருக்கும்

v  உறவுகள் பிரிந்து இருக்கும்

v  பெருத்த ஏமாற்றங்கள் இருக்கும்

v  அர்த்தம் இல்லா வாழ்க்கை இருக்கும்

இப்படி பிரச்சினையில் தத்தளித்து கொண்டு இருப்பவர்களுக்கு

வாஸ்துவையும் புரிய வைப்போம்;

பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, ஜெயிக்க ஆண்டாள் தியானம் எந்தளவு முக்கியம் என்பதையும் அறிய வைப்போம்;

வாஸ்துவினால் ஜெயித்தவர்களையும் பேச வைப்போம்;

வாஸ்து சரியில்லை என்று சொல்வோரையும் தெளிய வைப்போம்;

என்பதற்காக தான் இந்த கூட்டம் நடைபெற இருக்கின்றது…..

மேற்சொன்ன விஷயங்கள் பொதுநலம் சார்ந்தது என்றால்…. இந்த கூட்டத்தில் என்னுடைய சுயநலம் என்று ஒன்று உள்ளது…. அது என்னவென்றால் வருகின்ற அழைப்பாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கவிமான திருப்பணிக்காக தலா ரூ.10,000/- கொடுத்தால் கூட 300 நபர்களுக்கு ரூ.30 இலட்சம் என்கின்ற இலக்கை அடைந்து ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு சிறிய அளவில் உதவ முடியும் என்பதுதான்…

என்னை பொறுத்தவரை விலைமதிப்பில்லா என் ஆராய்ச்சி விஷயங்களை என் மக்களுக்காக, என்னை நம்பியவர்களுக்காக கொடுப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமே….

இந்த இடத்தில் நிறைய நண்பர்கள் (என்னிடம் வாஸ்து பார்க்காதவர்கள்) நாங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்… அவர்களுக்கு நான் சொல்லி கொள்ளும் ஒரே விஷயம் நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்படுவது கண்டிப்பாக எனக்கு மகிழ்ச்சியை தான் கொடுக்கும்…

வாஸ்து வாடிக்கையாளர் அல்லாத அப்படிப்பட்ட நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்:-  

நீங்கள் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நான் சம்மதிக்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள்….

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு என்று நீங்கள் என்ன கொடுக்க போகிறீர்கள் என்பதை தெளிவு படுத்தவும் / தெரிய படுத்தவும்…. அதனை வைத்து உங்கள் தேர்வை நான் முடிவு செய்து கொள்கின்றேன்… (தயவு செய்து நான் ஏற்கனவே ஆண்டாளுக்கு கொடுத்து விட்டேன் என கூற வேண்டாம்).

நிகழ்ச்சி பற்றிய சில குறிப்புகள்:-

  • நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் நுழைவு சீட்டு வாங்கி கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தை தவிர்த்து, நுழைவு சீட்டை உடனே வாங்கவும்.
  • அவரவர் வசதிக்கேற்ப தங்க இட வசதி செய்து தரப்படும் (அதற்குண்டான தொகையை தங்குபவர், தங்குமிடத்தில் நேரடியாக செலுத்தி விட வேண்டும்).
  • கேள்விகளை எழுதி எடுத்து வரவும்.

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 8 =