#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கஞ்சமலை

July 27, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கஞ்சமலை 183.#அருள்மிகு_பாலமுருகன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலமுருகன் ஊர் : கஞ்சமலை மாவட்டம் : சேலம் ஸ்தல வரலாறு: திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப விமோசனம் அளித்தார். முருகனுக்கும், மயிலுக்கும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஓமாம்புலியூர்

July 25, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஓமாம்புலியூர் முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு சிவபெருமான் உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்ட தலம் இது. 182.#அருள்மிகு_பிரணவ_வியாக்ரபுரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) அம்மன் : பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை தல விருட்சம் : இலந்தை தீர்த்தம் : கொள்ளிடம், கவுரி புராண பெயர் : உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் ஊர் : ஓமாம்புலியூர் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: உமாதேவியார் ஓம் என்ற பிரணவ …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தாளக்கரை

July 25, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தாளக்கரை தாயினும் சாலப்பரிந்து தாங்கும் சிறப்பு பெற்றவர் தாளக்கரை நரசிம்மர் 181.#அருள்மிகு_லட்சுமி_நரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தல விருட்சம் : ஈஞ்சமரம் தீர்த்தம் : தெப்பம் புராண பெயர் : தாவாய்பட்டினம் ஊர் : தாளக்கரை மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: ஒரு பச்சிளம் பாலகனைக் காக்க திருஅவதாரம் எடுத்த நரசிம்மமாகத் தோன்றியிருந்தாலும், அவன் தானே மூவுலகங்களையும்காக்கும் கடவுள் அதனால் தான். தான் வந்த பணியான இரணிய வதத்தை அரங்கேற்றியபின் தன் கோபத்தை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இலுப்பைபட்டு

July 23, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இலுப்பைபட்டு சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோயில் 179.#அருள்மிகு_நீலகண்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர் அம்மன் : அமிர்தவல்லி, மங்களாம்பிகை, தல விருட்சம் : இலுப்பை தீர்த்தம் : பிரம்ம, அமிர்த தீர்த்தம் புராண பெயர் : பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை ஊர் : இலுப்பைபட்டு மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: பாற்கடலை கடைந்தபோது வாசுகி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாளப்புத்தூர்

July 22, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாளப்புத்தூர் 178.#அருள்மிகு_மாணிக்கவண்ணர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி தல விருட்சம் : வாகை தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் புராண பெயர் : திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர் ஊர் : திருவாளப்புத்தூர் மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: ருதுகேதன் எனும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே சிவன் மாணிக்க மழையை பொழிவித்தார். எனவே …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கள்வனூர்

July 20, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கள்வனூர் 177.#திருக்கள்வனூர்_கள்வப்பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : கள்வப்பெருமாள் (ஆதிவராகர்) தாயார் : சவுந்தர்யலட்சுமி தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கள்வனூர் ஊர் : திருக்கள்வனூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது. அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், தன்னைக் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொருக்கை அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். 176.#அருள்மிகு_வீரட்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வீரட்டேஸ்வரர் உற்சவர் : யோகேஸ்வரர் அம்மன் : ஞானம்பிகை தல விருட்சம் : கடுக்காய் மரம், அரிதகிவனம் தீர்த்தம் : திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம் புராண பெயர் : திருக்குறுக்கை ஊர் : கொருக்கை மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்று தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார். கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது. உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவு தான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார். இன்றும் காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாகவே உள்ளது. புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அக்கைகள் குறுகிவிட்டன. தன்னால் பிழை நேர்ந்தது என்றெண்ணி தன் தலையை பாறை மீது மோதமுற்பட்டார் அப்போது இறைவன் காட்சி தந்து அவர் உடற்குறையைப் போக்கினார். இவர் குறுங்கை முனிவர் என்று இவர் பெற்றார் இவர் பெயரால் குறுக்கை என்று அழைக்கப்பட்டு நாளடைவில் கொருக்கை என்று ஆனது. குறுங்கை விநாயகர் சந்நிதியில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட இக்கோவில் மேற்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். எனவே இறைவன் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் கோயில் சிறப்புகள்: •இங்கு மூலவரான சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். •சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 26 வது தேவாரத்தலம் •மூலவர் வீரட்டேஸ்வரர். சதுர ஆவுடையார் உயர்ந்த பாணமாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். •மன்மதன் இறைவனை மீது எறிந்த ஐந்து அம்புகளுள் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. உற்சவர் யோகேஸ்வரர். அம்பாள் ஞானாம்பிகை. •ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். •அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. •தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். •காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். •ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் உள்ளது. •நடராச சபையில் சிவகாமி மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை சம்பு விநோத சபை காமனங்கநாசனி சபை என்ற பெயரில் உள்ளது. •இத்தல விநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். •இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். •இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதரின் lனது திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார். •இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம். •இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம். அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம். •திருநாவுக்கரசர் தனது பாடல்களில் இறைவன் மார்கண்டேயருக்கு அருள் புரிந்தது. சண்டேசருக்கு அருளியது. முற்பிறப்பில் சிலந்தியாக இருந்தபோது செய்த தொண்டிற்காக மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறப்பெடுக்கச் செய்தது. திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை பூஜிக்க ஒரு நாள் மலர்களில் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து திருமால் அர்ச்சிக்க அவருக்கு அருள் செய்தது. தினந்தோறும் கல்லால் அடித்து பூஜை செய்த சாக்கிய நாயானாருக்கு அருளியது. கண்ணப்ப நாயானாருக்கு அருளியது. திருமறைக்காட்டில் அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கை தன் மூக்கால் தூண்டி பிரகாசமாக எரியச் செய்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செயது அருளியதை எல்லாம் குறிப்பிட்டு வீரட்டனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். •லட்சுமி, திருமால், பிரமன், முருகன், ரதி வழிபட்டுள்ளனர். •மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது, சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. •திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர். •இக்கோயிலில் உள்ள மதன சம்ஹார மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறுநாள் மட்டுமே, அதாவது சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி தட்சிணாயனம், மாசி மகம், உத்தராயணம் ஆகிய தினங்களில் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது திருவிழா: மாசி மகம் – காமதகன விழா – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும் மார்கழி மாதம் – திருவாதிரை உற்சவம்- சுவாமி புறப்பாடு- இதுவும் சிறப்பான விழா ஆகும்.. திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை – 609 203, நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4365-22389 அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து தென்கிழக்கே 6 கிலோமீட்டர் சென்றால், கொருக்கை திருத்தலத்தை அடையலாம். #templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #கொருக்கை #வீரட்டேஸ்வரர் #யோகேஸ்வரர் #ஞானம்பிகை #திருக்குறுக்கை #கொருக்கை #veeratteswarartemple #korukkai #DrAndalPChockalingam

July 20, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொருக்கை அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். 176.#அருள்மிகு_வீரட்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வீரட்டேஸ்வரர் உற்சவர் : யோகேஸ்வரர் அம்மன் : ஞானம்பிகை தல விருட்சம் : கடுக்காய் மரம், அரிதகிவனம் தீர்த்தம் : திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம் புராண பெயர் : திருக்குறுக்கை ஊர் : கொருக்கை மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சூரபன்மன், …

#அறிந்தகோவில்கள்அறியாத_ரகசியங்கள் மகாபலிபுரம்:

July 19, 2023 0 Comments

#அறிந்தகோவில்கள்அறியாத_ரகசியங்கள் மகாபலிபுரம்: 175. #தலசயனப்_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர் : உலகுய்ய நின்றான் தாயார் : நிலமங்கைத் தாயார் தல விருட்சம் : புன்னை மரம் தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி புராண பெயர் : திருக்கடல் மல்லை ஊர் : மகாபலிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் #ஸ்தலவரலாறு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் ஆட்சியின் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒருநாள் திடீரென்று இத்திட்டம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை திருமலை அமரர் பதிகாத்த நயினார் 174.#அருள்மிகு_சுப்பிரமணியசாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சாமி ஊர் : தோவாளை மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு: இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் கூறப்படுகிறது. விண்ணுலகிற்கு தினமும் மலர் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமணஞ்சேரி

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமணஞ்சேரி சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். 173.#அருள்மிகு_உத்வாகநாதர்_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் அம்மன் : கோகிலா தல விருட்சம் : கருஊமத்தை தீர்த்தம் : சப்தசாகரம் புராண பெயர் : மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ஊர் : திருமணஞ்சேரி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் …