கடிதம் – 15 – ஆண்டாள் கல்வி திட்டம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
நிறைய பேர் சார் உங்களால் நன்றாக இருக்கின்றேன். நீங்கள் வாஸ்து பார்த்த பிறகு நன்றாக இருக்கின்றேன். குழந்தை பிறந்தது. திருமணம் ஆனது. கஷ்டம் போனது. சந்தோஷமாக இருக்கின்றோம் என்று சந்தோஷத்துடன் என்னிடம் சொல்ல கேட்டிருக்கின்றேன்…
அப்படி சொன்ன அன்பு உள்ளங்களுக்கும், சொல்ல போகும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:-
உங்களுக்கு கிடைத்த உங்களுக்கு கிடைக்க போகும் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க ஓர் அற்புத அரிய வாய்ப்பு…
நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் அரசு பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் ஒரு மாணவ மாணவிக்கு ரூ.1000 வீதம் என கணக்கு வைத்து 10 மாணவ மாணவிகளின் படிப்பு செலவை ஏற்று கொள்ளுங்கள். வருடத்திற்கு ரூ.10,000 செலவு என்று வைத்து கொண்டால் கூட சராசரி வருமானம் உள்ள ஒரு தனி மனிதன் ஒரு நாளைக்கு ரூ.28 மிச்சபடுத்தினாலே இந்த நல்ல விஷயத்தை செய்து முடிக்க முடியும்.
நீங்கள் பணக்காரனாக மாறுவதற்கும் பணக்காரனாக தொடர்ந்து வாழ்வதற்கும் தயவு செய்து இந்த செலவை செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால இந்தியாவை ஜாதி, சமயம் அற்ற பலமான இந்தியாவாக ஆக்க முடியும்.
உதவி செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
உதவி செய்யும் இடத்தில் ஜாதி, மதம், இனம் பார்க்காதீர்கள்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுங்கள்.
இந்த சேவையில் உங்கள் நண்பர்களையும் சேர்த்து கொண்டு இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நீங்கள் மாணவ மாணவிகளுக்கு உதவி செய்வதை போட்டோ எடுத்து அந்த போட்டோவுடன் பயன் பெற்ற மாணவ மாணவியின் பெயர், மாணவ மாணவியின் முகவரி, பள்ளியின் பெயர், பள்ளி இருக்கும் இடம் போன்ற விஷயங்களை சேர்த்து எனக்கு அனுப்புங்கள். அது உங்களை விளம்பரபடுத்துவதற்காக அல்ல. பார்ப்பவர்களையும் உதவி செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இந்த விஷயங்கள் நமக்கு அவசியமாகிறது.
உங்களால் பொருளாதாரரீதியாக கஷ்டப்படும் மாணவ மாணவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் உங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும் பள்ளியையும், மாணவ மாணவிகளையும் தெரியபடுத்துகின்றேன்.
இந்த திட்டத்திற்காக திருமதி.கல்யாணி கண்ணன் – டெல்லி வாழ் தமிழர் – ரூ.5000 கொடுத்து இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். அந்தப் பணத்தை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வையப்பமலை அரசு பள்ளிக்கு கொடுத்து விட்டோம். பணம் யாருக்கு போய் சேர்ந்தது என்கின்ற விபரம் விரைவில் வெளியிடப்படும்.
ஆண்டாள் கல்வி திட்டம் என்ற பெயரின் கீழ் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் பின் தங்கிய மாணவ மாணவிகளை வெற்றி பெற வைப்போம்.
ஜெய்ஹிந்த்
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்