பேரம்- சிறகுகள் 5
பேரம் – சிறகுகள் 5
சமீபத்தில் என்னுடைய வீட்டிலிருந்து 10 கட்டிடம் தள்ளி
பூ மற்றும் கீரை வியாபாரம் செய்யும் பெண்ணிடம்
சென்னையில் பிறந்து சென்னையில் வாழும்
சென்னை மட்டுமே தெரிந்த
(நமக்கு தெரியும் ல)
ஒரு மனிதர் வோல்வோ காரில் இருந்து இறங்கி விலை எல்லாம் அதிகம் சொல்லாதம்மா
10 வாழை இலை வேண்டும்
இன்றைக்கு அம்மாவாசை
என்றதும்
பூ விக்கின்ற அந்த அம்மா
சொன்ன விலையை கேட்டு
அதிர்ச்சி அடைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு அவர் சொன்ன விலையில் இருந்து 25 ரூபாய் கம்மியாகத்தான் வேண்டும் என்று அடம் பிடித்த பின் பத்து ரூபாய் கம்மியாக கொடுத்துவிட்டு முன்னோர்களுக்கு வீட்டில் வைத்து திதி கொடுப்பதற்காக இலையை வாங்கி சென்றார் வோல்வோ காரில் வந்த பிதாமகன்.
அந்தப் பெண்ணுக்கு சிறிய ஏமாற்றம் தான் இந்த வியாபாரத்தில் – அது நன்றாக முகத்தில் தெரிந்தது.
எனக்கு என்ன சங்கடம் என்றால் அதே வோல்வோ கார் மனிதர்
எதிரே உள்ள ஆருஷ் சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கி இருந்தால் பேரம் பேசி இருக்க முடியாது. அதற்கும் சற்று பக்கத்தில் உள்ள பழமுதிர் சோலையில் பொருள் வாங்கி இருந்தாலும் பேரம் பேசி இருக்க முடியாது.
அது என்ன நடைபாதை கடை என்றால் மட்டும் இந்த அயோக்கியத் தனம்.
இத்தனை பேரம் பேசி திதி கொடுத்து என்ன ஆகப்போகின்றது செத்து சுற்றும் ஆவிகளுக்கு.
பாவிகளே திருந்துங்கள்
ஆவியாவதற்குள்…..
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்